ARTICLE AD BOX

துபாயில் இன்று நடைபெறும் ஐசிசிஐ சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. நடப்பு சாம்பியன் டிராபி தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத இந்திய அணி அதே உத்வேகத்துடன் இறுதி ஆட்டத்திலும் வெற்றியை வசப்படுத்தி சாம்பியன் கோப்பை வெல்ல வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் டெல்லியில் சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியை மையமாக வைத்து 5000 கோடி அளவுக்கு சூதாட்டம் நடந்துள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர்பாக ஐந்து பேரை கைது செய்து லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களை டெல்லி காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளார்கள். சர்வதேச சூதாட்டக்காரர்களுக்கு விருப்பமான அணியாக இந்தியா இருப்பதாகவும் அவர்கள் அனைவரும் நிழல் உலக தாதா கும்பலோடு தொடர்புடையவர்கள் எனவும் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.