இந்திய அணியின் எதிர்காலம்.. இனி இவங்க கையிலதான்.. அதனாலதான் இதுக்கு ட்ரை பண்றேன் – விராட் கோலி

6 hours ago
ARTICLE AD BOX

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.

இந்த சூழ்நிலையில் வெற்றி பெற்ற பிறகு இந்திய அணியின் விராட் கோலி சில முக்கியமான விஷயங்கள் பேசி இருக்கிறார்.

இந்திய அணி வெற்றி

இந்த போட்டியில் டாஸ் இழந்த இந்திய அணி முதலில் பந்து வீச ஆரம்பித்தது. இதன்படி பேட்டிங் களம் இறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் வில் யங் 15 ரன்னில் வெளியேற, மற்றொரு தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திர அதிரடியாக விளையாடி 37 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதற்குப் பிறகு இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் நியூசிலாந்து அணியால் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க முடியவில்லை. இதனால் நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் முடிவில் 251 ரன்கள் குவித்தது.

அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்தி விட்டு வெளியேறினார். 76 ரன்கள் எடுத்து வெளியேறிய ரோஹித், அதற்குப் பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் 48 ரன்கள் அக்சார் பட்டேல் 29 ரன்கள், கே எல் ராகுல் 34 ரன்கள் எடுத்து இதனால் இந்திய அணி 49 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் குவித்தது. இந்த நிலையில் விராட் கோலி வெற்றி குறித்து முக்கியமான விஷயங்கள் பேசி இருக்கிறார்.

விராட் கோலி பேட்டி

இது குறித்து விராட் கோலி கூறும் போது ” ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு பிறகு நாங்கள் எழுச்சி பெற விரும்பினோம். இந்த தருணம் மிகவும் அற்புதமானதாக இருக்கிறது. இளைஞர்களோடு சேர்ந்து விளையாடியதில் மிகவும் மகிழ்ச்சி. அவர்கள் இந்திய அணியை சரியான திசையில் முன்னோக்கி எடுத்து செல்கிறார்கள். இவ்வளவு காலம் விளையாடிய பிறகு நீங்கள் அழுத்தத்தை நோக்கி எதிர்கொள்ள விரும்புவீர்கள். பட்டங்களை வெல்ல முழு அணியும் வெவ்வேறு ஆட்டங்களில் முன்னேற வேண்டும். மேலும் இளைஞர்கள் சிறப்பான வகையில் விளையாடினார்கள்.

இதையும் படிங்க:நான் இதை ஓபனா சொல்ல முடியுமானு தெரியல..5ல் 3 முறை எனக்கு இது நடந்தது – கேஎல் ராகுல்

இந்த கூட்டு முயற்சி தான் எங்களை முன்னோக்கி செல்ல முடிந்தது. நான் இந்த வீரர்களிடம் பேச முயற்சிக்கிறேன், அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன், நான் இவ்வளவு காலம் எப்படி விளையாடினேன் என்பதை அவர்களிடம் சொல்ல விரும்புகிறேன். வெளியேறும் போது நீங்கள் ஒரு சிறந்த நிலையில் வெளியேற விரும்புவீர்கள் ஸ்ரேயாஸ், கில், ராகுல் ஆகியோர் அற்புதமாக தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விளையாடியுள்ளனர். நியூசிலாந்து அணி இந்த போட்டியில் சிறப்பாக விளையாடியது. குறைந்த வீரர்களை கொண்டு என்ன செய்ய முடியும் என்பதை அவர்கள் வெளிப்படுத்தி உள்ளனர், அவர்களை பார்க்கும்போது பிரமிப்பாக உள்ளது” என்று விராட் கோலி பேசியிருக்கிறார்.

The post இந்திய அணியின் எதிர்காலம்.. இனி இவங்க கையிலதான்.. அதனாலதான் இதுக்கு ட்ரை பண்றேன் – விராட் கோலி appeared first on SwagsportsTamil.

Read Entire Article