ரோகித் சர்மாவின் தலைமையில் இந்தியா எத்தனை ICC கோப்பைகளை வென்றது?. சாதனைகள் இதோ!

5 hours ago
ARTICLE AD BOX

ICC trophies: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி தனது 7வது ஐசிசி பட்டத்தை வென்றுள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக களமிறங்கிய வில் யங், ரச்சின் ரவீந்திரா ஜோடி அதிரடியாக விளையாடியது. 8 ஆவது ஓவரில் வருண் சக்கரவர்த்தி வில் யங் விக்கெட்டை வீழ்த்தினார். இதனையடுத்து 11 ஓவரை வீசிய குல்தீப் யாதவ் முதல் பந்திலேயே ரச்சின் ரவீந்திரா விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்ததாக 13 ஆவது ஓவரை வீசிய குல்தீப் வில்லியம்சன் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார்.

இதனையடுத்து, டாம் லாதாம் – மிட்செல் ஜோடி நிதானமாக விளையாடினர். இந்திய அணி பந்துவீச்சு தரப்பில் வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் ஜடேஜா, ஷமி ஆகியோர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருக்கிறார்கள். அணியின் ஸ்கோர் 100 ரன்களை கடந்த நிலையில், டாம் லாதாம் விக்கெட்டை ஜடேஜா கைப்பற்றினார். இந்நிலையில் 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ரோகித் ஷர்மா, சுப்மன் கில் ஆகியோர் அதிரடியாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப்பாக 100 ரன்களை கடந்தது. இருப்பினும், 50 பந்துகளில் 31 ரன்கள் எடுத்திருந்த சுப்மன் கில் சான்ட்னர் வீசிய பந்தில் கிளென் பிலிப்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய விராட் கோலி 2 பந்துகளில் 1 ரன் எடுத்து சான்ட்னர் வீசிய பந்தில் எல்.பி. டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்து வெளியேறி அதிர்ச்சியளித்தார்.

இதையடுத்து ஆட்டத்தின் 27 ஆவது ஓவரை ரச்சின் ரவிந்திரா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை இறங்கி அடிக்க முயன்றபோது பந்தை தவற விட்ட ரோஹித் சர்மா ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். 83 பந்துகளை எதிர்கொண்ட ரோஹித் சர்மா 76 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் ஒருநாள் அணியின் கேப்டனாக புதிய சாதனை படைத்தார் ரோஹித் ஷர்மா. கேப்டனாக 2,500 ரன்களை கடந்தார் இந்தியாவின் ரோஹித் ஷர்மா. இதையத்து ஷ்ரேயாஸ் – அக்சர் படேல் ஜோடி நிதானமாக விளையாடினர். 48 ரன்களுடன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்தார்.

சாம்பியன்ஸ் கோப்பையை மீண்டும் வெல்ல 21 பந்துகளில் 24 ரன்களே தேவை என்ற நிலையில், கேஎல் ராகுல் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தனர். ஜேமிசன் வீசிய 48வது ஓவரில் ஷார்ட் பாலை அடிக்க முயன்று அவரிடமே கேட்ச் கொடுத்து 18 ரன்களில் அவுட் ஆனார் ஹர்திக். இந்திய அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கினார் ஜடேஜா. 49வது ஓவரிலேயே இந்திய அணி மொத்தம் 254 ரன்கள் சேர்த்து வெற்றிபெற்றது. கேஎல் ராகுல் 34 ரன்களும், ஜடேஜா 9 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சரித்திர வெற்றிபெற்றது. தோனிக்கு பிறகு ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா மீண்டும் சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது. ரோஹித் சர்மாவின் தலைமையில், இந்தியா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஐ.சி.சி பட்டத்தை வென்றுள்ளது. இது வரலாற்றில் முதல் முறையாக நடந்துள்ளது. கடந்த ஆண்டு அவரது தலைமையில் இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்றது. ரோஹித் சர்மாவின் தலைமையில், இந்தியா 2 ஐசிசி போட்டிகளை வென்றுள்ளது (டி20 உலகக் கோப்பை 2024 மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025).

அதிவேக அரைசதம்: இந்தப் போட்டிக்கு முன்பு, ரோஹித் சர்மா ஒரு ஐ.சி.சி போட்டியின் இறுதிப் போட்டியில் அரைசதம் அடித்ததில்லை. ஐ.சி.சி போட்டியின் இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா அடிக்கும் முதல் அரைசதம் இதுவாகும். அவர் 41 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் எந்தவொரு இந்திய வீரரும் அடித்த வேகமான அரைசதம் இதுவாகும்.

சிறந்த வீரர் விருதை வென்ற 4வது கேப்டன்: சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா 76 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். இதற்காக அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. ஐ.சி.சி ஆண்கள் ஒருநாள் போட்டி இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்ற உலகின் நான்காவது கேப்டன் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவருக்கு முன்பு, மேற்கிந்திய தீவுகளின் கிளைவ் லாயிட் (1975), ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (2003) மற்றும் இந்தியாவின் எம்.எஸ். தோனி (2013) ஆகியோர் கேப்டனாக ஒருநாள் இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளனர். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்ற இரண்டாவது இந்தியர் ரோஹித் சர்மா ஆவார். அவருக்கு முன்பு, ரவீந்திர ஜடேஜா 2013 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் இந்த விருதை வென்றிருந்தார்.

ஷுப்மான் கில்லுடன் சேர்ந்து ஒரு சாதனை: முதல் விக்கெட்டுக்கு ரோஹித் சர்மாவும், ஷுப்மன் கில்லும் 105 ரன்கள் சேர்த்தனர். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் முதல் விக்கெட்டுக்கு இது மூன்றாவது 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் ஆகும் .

Readmore: வெப்பம் தாங்க முடியலையா? இதை மட்டும் பண்ணுங்க, ஏசியே இல்லாமல் வீடு குளுகுளுன்னு இருக்கும்..

The post ரோகித் சர்மாவின் தலைமையில் இந்தியா எத்தனை ICC கோப்பைகளை வென்றது?. சாதனைகள் இதோ! appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article