"பெருசு" படத்தின் டைட்டில் டிராக் வெளியானது

14 hours ago
ARTICLE AD BOX

சென்னை,

கார்த்திக் சுப்பராஜ் தனது ஸ்டோன் பெஞ்சு நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ள படம் 'பெருசு'. இந்த படத்தில் வைபவ் மற்றும் அவரது சகோதரர் சுனில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் சுனில், பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, தீபா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படம் இறுதிச் சடங்கு சம்பந்தமான கதைக்களத்தில் காமெடி கலந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகி உள்ளது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இப்படத்தை இளங்கோ ராமநாதன் இயக்கியுள்ளார். நடிகை நிஹாரிகா இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் இதுவரை ரூ 1.5 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் டைட்டில் டிராக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை பாலாஜி ஜெயராமன் வரிகளில் அருண் ராஜ் பாடியுள்ளார்.

Read Entire Article