ARTICLE AD BOX
ஜோதிகாவால் சூர்யாவுக்கு ஆபத்து வருமா?.. அவங்க விரக்தில இருக்காங்க.. ஓபனாக பேசிய பிரபலம்
சென்னை: சூர்யாவும் ஜோதிகாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். தற்போது பாலிவுட்டில் கவனத்தை திருப்பியிருக்கும் ஜோ கடைசியாக டப்பா கார்ட்டெல் வெப் சீரிஸில் நடித்திருந்தார். அது ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. மேலும் அங்கேயே தனது கணவர், குழந்தைகளுடன் செட்டிலாகிவிட்டார். சூழல் இப்படி இருக்க சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தமிழ் சினிமா பற்றி ஜோதிகா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
நடிகை ஜோதிகா வாலி திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு வரிசையாக படங்களில் கமிட்டான அவர் வசந்த் இயக்கத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் சூர்யாதான் ஹீரோ. அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் அந்தப் படத்தின் ஷூட்டிங் முடிவதற்குள்ளாகவே காதலாக மாறியது. தொடர்ந்து இரண்டு பேரும் பல வருடங்கள் காதலித்துவந்தார்கள். அவர்கள் காதலில் இருந்தபோதே பேரழகன், சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட படங்களிலும் சேர்ந்து நடித்தார்கள்.

திருமணம் செய்துகொண்ட ஜோடி: அவர்களது காதலுக்கு முதலில் சிவக்குமார் ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் திருமணம் செய்தால் வீட்டு சம்மதத்துடன்தான் செய்துகொள்வோம் என்று இரண்டு பேரும் உறுதியாக இருந்தார்கள். அவர்களின் உறுதித்தன்மையை பார்த்த சிவக்குமார் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினார். அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தியா என்ற மகளையும், தேவ் என்ற மகனையும் இரண்டு பேரும் பெற்றெடுத்தார்கள்.
மீண்டும் நடிக்க வந்த ஜோதிகா: குழந்தைகள் பிறந்ததைத் தொடர்ந்து முழுநேர இல்லத்தரசியாக மாறிய ஜோதிகா; 36 வயதினிலே படத்தின் மூலம் நடிப்பதற்கு மீண்டும் வந்தார். அந்தப் படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. குறிப்பாக அந்தப் படத்தில் ஜோதிகாவுக்குத்தான் அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அவர் நடித்த காற்றின் மொழி, ராட்சசி, உடன்பிறப்பே, பொன்மகள் வந்தாள் என ஏராளமான படங்களில் நடித்தார். அந்தப் படங்கள் அனைத்துமே ஹீரோயின் சென்ட்ரிக் படங்களாகவே அமைந்திருந்தன.
பாலிவுட்டுக்கு சென்ற ஜோதிகா: சூழல் இப்படி இருக்க ஜோதிகாவின் கவனம் மீண்டும் பாலிவுட் பக்கம் சென்றது. அங்கு ஷைத்தான், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட படங்களில் நடித்த ஜோ, கடைசியாக டப்பா கார்ட்டெல் என்கிற வெப் சீரிஸில் நடித்தார். அது ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. இதற்கிடையே தனது கணவர் சூர்யாவையும் பாலிவுட்டில் கவனம் செலுத்துமாறு அவர் சொல்வதாகவும்; அதன் காரணமாகத்தான் குடும்பத்துடன் அவர்கள் மும்பையில் தற்போது செட்டிலாகியிருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

ஜோதிகாவின் பேட்டி: நிலவரம் இப்படி இருக்க டப்பா கார்ட்டெல் வெப் சீரிஸ் ப்ரோமோஷனில் பேசிய ஜோதிகா, 'தென்னிந்திய சினிமாக்களில் குறிப்பாக தமிழ் சினிமாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதைகள் எழுதப்படுவதில்லை. ஹீரோக்களை ஹீரோயின்கள் புகழும்படிதான் எழுதப்படும்' என்று கூறியிருந்தார். அதனைப் பார்த்த ரசிகர்களோ, 'சந்திரமுகி, மொழி, ராட்சசி, நாச்சியார், பொன்மகள் வந்தாள்'போன்று ஹீரோயின்களை மையப்படுத்திய படங்களில் நடித்துவிட்டு ஜோதிகா இப்படி பேசலாமா என்று கூறினார்கள்.
எனக்கு நடந்த பாலியல் தொல்லை.. சகஜமாக இருக்க முடியவில்லை.. முதன்முறையாக மனம் திறந்த பாவனா
அந்தணன் பேட்டி: இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய பிரபல பத்திரிகையாளரான அந்தணன், "ஜோதிகாவின் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுதான் படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அவர் சமீப காலமாகவே தவறாகத்தான் பேசிக்கொண்டிருக்கிறார். கங்குவா படத்தை பற்றிய விமர்சனத்துக்குக்கூட சூர்யா மீது தனிப்பட்ட வெறுப்பு சிலருக்கு இருப்பதாக கூறினார். அந்தப் படம் நன்றாக இல்லை என்றே அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் விரக்தியில் இருக்கிறார் அதனால்தான் அப்படி பேசுகிறார். அதேபோல் ஜோதிகா பேசுவதால் சூர்யாவின் படங்களுக்கு ஆபத்தெல்லாம் வராது. ரெட்ரோ திரைப்படம் உண்மையில் நன்றாக இருந்தால் அது ஹிட்டாகத்தான் போகிறது" என்றார்.