பெரியார் தொடர்பாக சீமானின் பேச்சு: அமைச்சர் சேகர் பாபு நிலை என்ன?.. பளீச் பேட்டி.!

6 hours ago
ARTICLE AD BOX


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடலூரில் கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்தபோது, பகுத்தறிவு பகலவன் என போற்றப்படும் ஈவே இராமசாமி பெரியாரை அவமதித்து பேசி இருந்தார். இந்த விஷயம் பெரியாரிய ஆதரவாளர்கள் இடையே கடுமையான எதிர்ப்பை சந்தித்தது. 

சீமான் Vs பெரியார் ஆதரவாளர்கள்

சீமான் தனது கண்டன பேச்சில் உறுதியாக இருக்கும் நிலையில், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சீமான் வீடு பெரியாரிய ஆதரவாளர்களால் முற்றுகையிடப்படும் போராட்டம் நடத்தப்பட்டு வந்தது. திமுக தரப்பில் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் சீமானின் பேச்சுக்கு பதிலடி வழங்கி வருகின்றனர்.

திராவிட மண்

இந்நிலையில், சென்னை எண்ணூரில் பேட்டி அளித்த தமிழ்நாடு மாநில இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு, "நூற்றாண்டுகளுக்கும் மேலாக பெரியார் தமிழ்நாட்டில் வேரூன்றிவிட்டார். இது திராவிட மண். இங்கு சித்தாந்தம் பல இருக்கலாம், ஆனால் பெரியாரின் கொள்கை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சிலர் தங்களை அடையாளப்படுத்த பெரியாருக்கு எதிராக பேசுகின்றனர். 

இதையும் படிங்க: #Breaking: திருப்பதியில் நிக்கிறான், திருச்செந்தூரில் கத்துறான் - அமைச்சர் சேகர் பாபு பதில்.. அடைத்து வைக்கப்பட்ட பக்தர்கள்..!

வடலூர் விவாகரத்து சட்டப்போராட்டம்

எங்களின் பணி மக்களுக்கு உழைப்பது மட்டும் தான். பெரியாரின் கொள்கையை அழிக்க ஒருவர் பிறந்ததுதான் இனி வர வேண்டும். பெரியாரின் பகுத்தறிவு கொள்கையை ஏற்றுக்கொள்ளாத நபர்கள் யாரும் இல்லை. வடலூரில், நெடிய சட்டப்போராட்டம் நடத்தினாலும், சர்வதேச மையத்தை திமுக அரசு அமைத்தே தீரும்" என பேசினார். 

இதையும் படிங்க: #Breaking: சீமான் வீடு முற்றுகை - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு., சூடேறும் பிரச்சனை.!

Read Entire Article