ARTICLE AD BOX
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமாருக்கும் - நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலெட்சுமிக்கும் இடையே நேரடி மோதல் நிலவியது.
இடைத்தேர்தல் என்பதால் அங்கு ஆளுங்கட்சியின் பணபலம் அதிகம் இருக்கும். மக்களுக்கு நேர்மையான தேர்தல் நடைபெறாது என குற்றச்சாட்டை முன்வைத்து அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்துவிட்டது.
திமுக வேட்பாளர் முன்னிலை
ஈரோடு கிழக்கு திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் முத்துசாமி தீவிர களப்பணியில் ஈடுபட்டு இருந்தார். இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், சந்திரகுமார் 37989 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி 7868 வாக்குகள் 12 மணிநிலவரப்படி பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: #Breaking: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிகாரி மாற்றம்; அதிரடி உத்தரவு.!
தொடர்ந்து காலை முதலாகவே திமுக வேட்பாளர் முன்னிலையில் இருக்கிறார். தேர்தலுக்கு முன்பில் இருந்து பெரியார் விவகாரத்தில் திமுக - நாதக இடையே கருத்து முரண், வாக்குவாதம் இருந்து வந்தது. இந்நிலையில், இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் முன்னிலையில் இருப்பது திமுகவினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
பெரியாரின் ஆவி பார்த்துக்கும்
இந்த விஷயம் தொடர்பாக திமுக நிர்வாகி & வழக்கறிஞர் சூர்யா வெற்றிகொண்டான் என்பவர் தனியார் தொலைக்காட்சியில் பேசினார். அப்போது அவர் பேசுகையில், "தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் சாதனைகளை வைத்து நாங்கள் வெற்றி அடைந்து இருக்கிறோம். பெரியாவின் ஆவி (ஆன்மா) சீமானை பார்த்துக்கொள்ளும். இந்த விஷயத்தை இந்தியாவே உணரும் தருணமாக ஈரோடு கிழக்கு வெற்றி அமையும்.
திமுக உட்பட பிற கட்சிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் பெரும்பாலும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு வாக்கு சேகரிக்க வரவில்லை. எனது சாதனைகளே மக்களிடம் சென்று நமக்கான ஆட்சியை, நமது உறுப்பினரை கேட்கட்டும் என முதல்வர் தெரிவித்தார். அதேபோல, இன்று முடிவுகள் வெளியாகி வருகிறது.
இது பெரியார் மண்ணா? பெரியாரே ஒரு மண் என கூறியவருக்கு புரிய வேண்டிய பாடம் இது. அவரை பெரியாரின் ஆன்மா பார்த்துக்கொள்ளட்டும்" என பேசினார்.
இதையும் படிங்க: #Breaking: அதிமுக முக்கியப்புள்ளி அமைச்சர் முன்பு திமுகவில் இணைவு.. ஈரோடு இடைத்தேர்தல் நிலவரம்.!