ARTICLE AD BOX
பெண்கள் சுதந்திரமாக இருக்க விரும்புவதால் திருமணம் செய்து கொள்வது கடினமாகிவிட்டது என இசையமைப்பாளர் இமான் கூறியுள்ளார்.
யூடியூபர் நிஹில் விஜயேந்திர சிம்ஹாவுடனான உரையாடலில் தமனிடம், திருமணம் செய்துகொள்வதற்கு சரியான வயது எது எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு சமூக விதிமுறைகள் மற்றும் பெண்களின் சுதந்திரமும் மாறிவிட்டதனால் இன்றைய சூழலில் திருமணம் செய்துகொள்வது குறித்து மறு ஆலோசனை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
அவர், "இப்போது யாரும் திருமணம் செய்துகொள்வதை நான் விரும்பவில்லை. பெண்களும் வாழ்க்கையில் சுதந்திரமாக இருக்க விரும்புவதனால் இது கடினமாக மாறிவிட்டது. அவர்கள் யாருக்கும் கீழும் இருக்க விரும்பவில்லை. நான் என்ன நினைக்கிறேன் என்றால்... நாம் முந்தைய பெண்கள் சமூகத்தை இழந்துவிட்டோம். நான் சரியான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறேனா எனத் தெரியவில்லை." எனக் கூறினார் அவர்.
தமனின் கருத்துகளுக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன.