பெண்களை ட்ரோன் மூலம் கண்காணிக்கும் ஈரான்…. இதற்கு தானா…? சர்வதே அளவில் குவியும் கண்டனங்கள்….!!

1 day ago
ARTICLE AD BOX

ஈரான் அரசாங்கம் அந்த நாட்டில் ஹிஜாப் அணியாத பெண்களை கண்காணிக்கவும், அவர்களை அடையாளம் காணவும் ட்ரோன்கள் மற்றும் மொபைல் செயலிகளை பயன்படுத்தி வருவதற்கு கண்டனங்கள் குவிந்துள்ளது. இந்த நிலையில் ட்ரோன்கள் மூலம் பொது இடங்களில் ஹிஜாப் அணியாத பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சேகரித்து வைத்துள்ளனர். அதன் பிறகு மொபைல் செயலிகள் மூலம் சம்பந்தப்பட்ட பெண்களை அடையாளம் கண்டு அபராதம் விதிக்கின்றனர். இது பெண்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும், தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் பலரும் விமர்சனம் தெரிவித்தனர்.

ஐக்கிய நாடுகள் சபை, ஈரான் கட்டாய ஹிஜாப் சட்டங்களை அமல்படுத்த ட்ரோன்கள், முக அங்கீகார தொழில்நுட்பம் மற்றும் அரசாங்க ஆதரவு மொபைல் செயலிகள் போன்ற கண்காணிப்பு முறைகளை அதிகமாக உபயோகப்படுத்தி வருவதாக கூறியுள்ளது. ஈரானின் நடவடிக்கைக்கு சர்வதேச அளவிலும் கண்டனம் குவிந்துள்ளது. பெண்களின் உரிமைகளை மதிக்க வேண்டும். இந்த கண்காணிப்பு முறைகள் பெண்களுடைய அச்ச உணர்வை உருவாக்கும். அவர்களது அன்றாட வாழ்க்கையை பாதிக்கும். பெண்கள் பொது இடங்களில் நடமாட அச்சப்படுவார்கள். அவர்களது சமூக மற்றும் பொருளாதார பங்கேற்பை இது கட்டுப்படுத்துகிறது. அவர்களது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைகிறது என சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளது.

Read Entire Article