ARTICLE AD BOX

இன்றைய காலகட்டத்தில் உடல் பருமனாக இருக்கும் இளைஞர்கள் உடம்பை குறைப்பதற்காக பல்வேறு டயட்களை பின்பற்றுகின்றனர். அதன் மூலம் அவர்கள் தங்களது உடல் எடையை குறைக்கின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் டிக்டாக் பிரபலமான கேத்ரின் என்பவர் Carnivore Diet என்ற முட்டை, தயிர், சிக்கன், பன்றி, இறைச்சி மட்டுமே சாப்பிட்டு வந்துள்ளார். காய்கறி, பழங்கள், தானியங்களை தவிர்த்ததால் பைபர் சத்து குறைந்துவிட்டது.
இந்நிலையில் அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது இதனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது கிட்னியில் கல் வளர்ந்ததாக தெரிவித்தனர். அதோட அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கூறினர். இச்சம்பவம் டயட் இருக்கும் இளைஞர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.