ARTICLE AD BOX
Benefits Of Nungu For Women's Health : கோடை காலம் தொடங்கி வட்டது. இந்த சீசனில் நுங்கு சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. உடலின் வெப்பத்தை தவிர்த்து குளிர்ச்சியாக வைக்கும் உணவில் நுங்கிற்கு ஈடு இணை ஏதுமில்லை. ஆனால் இது வெறும் உடல் சூட்டை மட்டும் தணிக்கும் என்று நீங்க நினைத்தால் அது தவறு. இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் பல ஆரோக்கிய நன்மைகளையும் நமக்கு வாரி வழங்குகிறது. அது குறித்து விரிவாக இங்கு தெரிந்து கொள்ளலாம்.
நுங்கில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்:
இரும்பு சத்து கால்சியம் பொட்டாசியம் சிங் மற்றும் வைட்டமின் பி ஆகிய பல ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. இது கோடை காலத்தில் வரப்பிரசாதம் ஆகும். நுங்கை இளநீரில் ஊற வைத்து சாப்பிட்டால் சத்துக்களும் அப்படியே கிடைக்கும் அது போல பதநீரிலும் நுங்கு போட்டு சாப்பிடாலும் சுவையாக இருக்கும்.
இதையும் படிங்க: Nungu Sarbath : கோடையில் உடல் குளுகுளுனு இருக்க ருசியான 'நுங்கு சர்பத்'..! ரெசிபி இதோ..
நுங்கு ஆரோக்கிய நன்மைகள்:
- கோடை காலத்தில் வரும் அம்மை நோயை தடுக்க நுங்கு மிகவும் நன்மை பயக்கும். மேலும் அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நுங்கு சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும்.
- உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைத்து, உடல் எடையை குறைக்கும் சக்தி நுங்கிற்கு உண்டு.
- நுங்கு வயிற்றுக் கோளாறுகளை சரி செய்யும் பண்புகளைக் கொண்டுள்ளன. மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு ஆகிய பிரச்சனை உள்ளவர்கள் நுங்கு ரொம்பவே நல்லது. மேலும் நுங்கும் குடல் புண்ணையும் ஆற்றும் தன்மையுடையது.
- ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்கள் நுங்கு சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை பிரச்சனை தீரும்.
- நாக்கில் அடிக்கடி புண் வந்து தொல்லை தருகிறது என்றால், இரண்டு நுங்கை சதைப் பகுதியை மட்டும் நீக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து, அதனுடன் தேங்காய் பால் கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் அல்சர் பிரச்சனை குறையும்.
- கோடைகாலத்தில் தலைமுடி மற்றும் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க முகப்பரு ஏற்படுவதையும் தடுக்க நுங்கு சாப்பிடுங்கள்.
- சுட்டெரிக்கும் வெயிலினால் ஏற்படும் வேர்க்குரு, கொப்புளங்கள் மற்றும் சரும பிரச்சனைகளில் இருந்து விடுபட நுங்கு உதவுகிறது.
- வேர்க்குரு மேல் நுங்கின் நீரை தடவினால் வேர்க்குரு விரைவில் மறையும்.
- கம்ப்யூட்டரில் அதிக நேரம் வேலை பார்ப்பவர்கள் ஒரு பருத்தி துணியில் மூங்கில் சாற்றை நினைத்து கண்ணின் மேல் வைத்து வைத்தால் கண்களில் ஏற்படும் சிவப்பு தன்மை மறைந்துவிடும் மற்றும் கண் சோர்வும் சரியாகும்.
- அதுபோல சர்க்கரை நோயாளிகள் நுங்கை சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
- அஜீரண கோளாறு கல்லீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கு நுங்கு ரொம்பவே நல்லது.
- உடல் சூட்டால் அவதிப்படுபவர்களுக்கு நுங்கு அருமருந்தாகும் இதை தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் நீரிழப்பு ஏற்படாது மற்றும் தாகம் தனியும்.
இதையும் படிங்க: நுங்கு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கலாமா... அது நல்லதா..?? வாங்க தெரிஞ்சிகலாம்!!
பெண்களுக்கு நுங்கின் நன்மைகள்:
1. வயிற்றில் குழந்தையை சுமக்கும் கர்ப்பிணி பெண்கள் நுங்கு சாப்பிட்டால் செரிமானம் துரிதமாக நடக்கும். அதுபோல நீங்கள் அடிக்கடி அசிடிட்டி மற்றும் மலச்சிக்களால் அவதிப்படுகிறீர்கள் என்றால் அதிலிருந்து விடுபட நுங்கு உங்களுக்கு உதவும். மேலும் வெயிலால் ஏற்படும் உடல் சோர்வை போக்க நுங்கு சாப்பிட்டு வந்தால் அதில் இருக்கும் நீர்ச்சத்து உங்களை புத்துணர்ச்சியாக வைக்கும்.
2. புதிதாக குழந்தை பெற்ற பெண்கள் நுங்கு சாப்பிட்டால் தாய் பால் நன்றாக சுரக்கும். மேலும் குழந்தைக்கு ஊட்டச்சத்து நன்றாக கிடைக்கும்.
3. நுங்கு வெள்ளைப்படுதல் பிரச்சனையிலிருந்து நிவாரணம் அளிக்கும்.
4. நுங்கில் அந்த்யூசைன் என்னும் ரசாயனம் இருப்பதால் இது பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோய் கட்டிகள் வராமல் தடுக்கும். பெண்கள் அதிக அளவு நூங்கு சாப்பிடுவது ரொம்பவே நல்லது.
5. கர்ப்பிபணிகளுக்கு நுங்கு நல்லது என்றாலும் அவர்கள் காலை உணவுக்கு பிறகு தான் நுங்கு சாப்பிட வேண்டும், அதுபோல நண்பகலில் நுங்கு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். மேலும், மருத்துவரிடம் ஆலோசித்த பிறகு சாப்பிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.!