ARTICLE AD BOX
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் ஒன்றுக்கு, நேற்று உத்திரப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த முகமது என்பவர், தனது இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் போட வந்தார்.
பின் வாகனத்தை அவர் இயக்கினார். அச்சமயம், திடீரென இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் பிற வாகன ஓட்டிகளும் அதிர்ச்சியடைந்தனர். சுதாரித்துக்கொண்ட பெட்ரோல் நிலைய ஊழியர்கள், தீயை விரைந்து செயல்பட்டு அணைத்தனர்.
இதனால் விபத்து தவிர்க்கப்பட்டது. தொடர்ச்சியாக வாகனத்தை இயக்கி வந்து, அதிக சூட்டுடன் பெட்ரோல் நிரப்பி, பின் வாகனமும் இயக்கப்பட்ட காரணத்தால், தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தகவல் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: தூத்துக்குடி: பீடை குடியால் குடும்பமே காலி.. கணவரை கொன்ற மனைவி.. தவிக்கும் 2 வயது குழந்தை..!
இதையும் படிங்க: தூத்துக்குடி: 4 மணிநேரம் மருத்துவர் இன்றி துடிதுடித்த கர்ப்பிணி.. பனிக்குடம் உடைந்து தாய்-சேய் துள்ளத்துடிக்க பலி.!