பெங்களூர் டிராபிக் பிரச்சனைக்கு விடிவுகாலம்.. டி.கே.சிவக்குமார் சொன்ன 2 விஷயம்..!!

3 hours ago
ARTICLE AD BOX
  செய்திகள்

பெங்களூர் டிராபிக் பிரச்சனைக்கு விடிவுகாலம்.. டி.கே.சிவக்குமார் சொன்ன 2 விஷயம்..!!

News

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக இரண்டு அடுக்கு மேம்பாலங்கள் மற்றும் சுரங்கச் சாலைகள் அமைக்கப்படும் என அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

ஐடி மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் வேலைவாய்ப்புக்காகவும் சுயதொழில் தொடங்குவதற்காகவும் பெங்களூருக்கு வருகை தந்த வண்ணம் இருக்கின்றனர். இதன் காரணமாக பெங்களூருவின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இந்த போக்குவரத்து நெரிசல் பிரச்சனை பெங்களூருக்கு எதிர்மறையான பெயரை ஏற்படுத்தித் தருகிறது.

பெங்களூர் டிராபிக் பிரச்சனைக்கு விடிவுகாலம்.. டி.கே.சிவக்குமார் சொன்ன 2 விஷயம்..!!

இந்த நிலையில் தான் கர்நாடக மாநில அரசு பெங்களூரு போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி. கே. சிவக்குமார், பெங்களூரில் போக்குவரத்து நெரிசலுக்கு பிரச்சனையை தீர்ப்பதற்கு இரண்டு அடுக்கு மேம்பாலங்கள் மற்றும் சுரங்க சாலைகள் , பஃப்பர் சாலைகள் உள்ளிட்டவை அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த சிவக்குமார் பெங்களூருவின் சாலை போக்குவரத்து பிரச்சனையை நான் என்னுடைய பொறுப்பில் எடுத்துக் கொள்கிறேன் நான் இந்த பிரச்சினையை தீர்க்க தீவிரமாக பணியாற்ற பணியாற்றுவேன் என கூறினார். டெல்லியை போல பெங்களூரு ஒரு திட்டமிடப்பட்ட நகரம் கிடையாது, பெங்களூருவில் ஜெயா நகர், இந்திரா நகர் மற்றும் மல்லேஸ்வரம் ஆகிய பகுதிகள்தான் திட்டமிடப்பட்டது என்றார். பெரிபெரல் ரிங் சாலை திட்டம் டிராபிக் பிரச்சனையை எளிதாக தீர்ந்திருக்கும் ஆனால் அது செயல்படுத்தப்படவில்லை என குறிப்பிட்ட அவர், இதற்கு முன்பு பெரிபெரல் ரிங் சாலை திட்டத்தை செயல்படுத்திருந்தால் 3000 கோடி மட்டுமே செலவாகி இருக்கும் அதுவே தற்போது நாம் செயல்படுத்த வேண்டும் என்றால் 26,000 கோடி ரூபாய் தேவைப்படும் என்றார்.

தற்போதைக்கு பெங்களூருவில் கிழக்கில் இருந்து மேற்கு பெங்களூருக்கு 17 கிலோமீட்டர் தொலைவிற்கும் வடக்கிலிருந்து தெற்கு பெங்களுருவில் 23 கிலோமீட்டர் தொலைவிற்கும் சுரங்கவரிச்சாலை அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான டெண்டர்கள் விரைவில் கோரப்படும் என தெரிவித்தார் .

மேலும் எங்கெல்லாம் புதிதாக மெட்ரோ ரயில் வழித்தடங்கள் அமைக்கப்பட இருக்கிறதோ அங்கே எல்லாம் இரண்டடுக்கு மேம்பாலங்கள் அமைக்கப்பட இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். இதற்கான செலவினங்களை பெங்களூர் மாநகராட்சி நிர்வாகமும் பெங்களூர் மெட்ரோ ரயில் கழக நிர்வாகமும் சமமாக பகிர்ந்து கொள்ளும் எனக் கூறியுள்ளார்.

ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு இரண்டடுக்கு மேம்பாலம் அமைக்க 120 கோடி ரூபாய் செலவாகிறது என்றும் அவர் தெரிவித்தார் . மேலும் 300 கிலோமீட்டர் தொலைவிற்கு 50 அடி அகலம் கொண்ட பஃப்பர் சாலைகள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Read Entire Article