ARTICLE AD BOX
Published : 14 Mar 2025 08:25 PM
Last Updated : 14 Mar 2025 08:25 PM
தொழில் துறையினர் பார்வையில் தமிழக பட்ஜெட் 2025 எப்படி?

கோவை: தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்புகளுக்கு தொழில் துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேவேளையில், மின்சார நிலை கட்டணத்தை குறைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.
இந்திய தொழில் வர்த்தக சபை கோவை தலைவர் ராஜேஷ் லுந்: கோவை மாவட்டத்தில் தொழில்துறை பயிற்சி நிலையம் அமைத்தல், செமி கண்டக்டர் பூங்கா அமைத்தல் உள்ளிட்ட கல்வி, தொழில்துறை என அனைத்து துறைகளிலும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் கோவை கிளை தலைவர் ராஜேஷ் துரைசாமி: கோவை விமான நிலைய மேம்பாட்டு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு ஏற்றுமதி அதிகரிக்க உதவும். தவிர வெளிநாட்டு நிறுவனங்களின் நேரடி முதலீட்டு நடவடிக்கையை ஊக்குவிக்கும். சுயாதீன முறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாங்க ரூ.20 ஆயிரம் கோடி மானியம் மற்றும் ரூ.1.5 லட்சம் மதிப்பில் கூட்டு காப்பீடு திட்டம் ஆகியவை மிகவும் வரவேற்கத்தக்கது.
தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் மிதுன் ராம்தாஸ்: பம்ப் மற்றும் வார்ப்பட தொழில் நிறுவனங்களுக்கு ‘சென்டர் ஆஃப் எக்செலன்ஸ்’ அமைத்தல் நடவடிக்கை கோவை மாவட்ட பம்ப்செட் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.
தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு, மாநில பொதுச் செயலாளர் ஜெயபால்: தமிழ்நாடு தொழில்நுட்ப ஜவுளி மிஷன் திட்டத்திற்கு ரூ.15 கோடி. இலவச வேட்டி, சேலை திட்டத்திற்கு ரூ.673 கோடி. கைத்தறி மற்றும் ஜவுளிக்கு ரூ.1,980 கோடி ஆகிய அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது. நீண்ட நாள் கோரிக்கையான ‘எல்டிசிடி’ பிரிவு மின்கட்டணம் குறைக்க வேண்டும். சூரிய ஒளி மின் உற்பத்திக்கு நெட்வொர்க் கட்டணம் ரத்து. மின்கட்டணத்தை இந்தாண்டு உயர்த்த கூடாது. பருத்தி விளைச்சல் அதிகரிக்க நடவடிக்கை உள்ளிட்ட அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது.
தமிழ்நாடு ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்க தலைவர் அருள்மொழி: பழைய விசைத்தறிகளை நாடா இல்லா தறிகளாக மேம்படுத்த ரூ.30 கோடி. ஆழியாரில் புதிய புனல் மின்நிலையம் ஆகிய அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.
‘டாக்ட்’ தலைவர் ஜேம்ஸ்: கோவையில் குறுந்தொழில் பேட்டை அமைப்பது. மின்கட்டணத்தில் நிலைக்கட்டணம் குறைப்பு போன்ற அறிவிப்புகள் இல்லாதது வருத்தம் அளிக்கிறது.
இன்ஸ்டியூட் ஆப் இந்தியன் பவுண்டரிமென்(ஐஐஎப்) முன்னாள் தேசிய தலைவர் முத்துகுமார்: வார்ப்பட மற்றும் பம்ப் தொழில் வளர்ச்சிக்கு ‘சென்டர் ஆஃப் எக்செலன்ஸ்’ அமைப்பது கோவையில் உள்ள தொழில் நிறுவனங்கள் மிகச் சிறந்த வளர்ச்சி பெற உதவும்.
தென்னிந்திய மில்கள் சங்கத்தின் தலைவர் சுந்தரராாமன்: ஆயத்த ஆடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்திக்கு பொது வசதி மையம் னெ்ற வகையில் முற்றிலும் தானியங்கு முறையில் கணினியால் கையாளக்கூடிய துணி வெட்டும் இயந்திர நிறுவனங்கள் அமைக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு எம்எஸ்எம்இ ஜவுளி நிறுவனங்களுக்கு மிகுந்த பயன் தரும். தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் என்ற முன்னெடுப்பிற்கு ரூ.15 கோடி ஒதுக்கீடு இத்துறையில் புதிய முதலீடுகளை கணிசமாக ஈர்க்க உதவும்.
‘கொடிசியா’ தலைவர் கார்த்திகேயன்: சிட்கோ சார்பில் 9 இடங்களில் தொழில்பேட்டைகள் அமைத்தல். கோவை மாநகராட்சி சாலை மேம்படுத்த ரூ.200 கோடி. 12.5 கி.மீ கோவை மேற்கு புறவழிச்சாலை திட்ட பணிக்கு ரூ.348 கோடி. கோவையில் அடிப்படை அறிவியல் மற்றும் கணித ஆராய்ச்சி மையத்திற்கு ரூ.100 கோடி ஆகியன வரவேற்கத்தக்கது.
காட்மா தலைவர் சிவக்குமார்: 10 மாவட்டங்களில் ரூ.100 கோடி செலவில் தொழிற்பயிற்சி மையங்கள் அமைத்தல், குறு, சிறு தொழில்முனைவோருக்கு கடன் வழங்க நிதி ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது. மின்சார நிலை கட்டணத்தை குறைத்தல், குறுந்தொழில்பேட்டைகள் கோவையில் அமைத்தல் போன்ற அறிவிப்புகள் கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும்.
‘கோப்மா’ தலைவர் மணிராஜ்: புதிய தொழில் பயிற்சி நிலைய அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஏற்கெனவே உள்ள நிலையங்களை நவீனப்படுத்த வேண்டும். மின்கட்டணம் தொடர்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும் அது குறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
‘சியா’ தொழில் அமைப்பின் தலைவர் தேவகுமார்: எம்எஸ்எம்இ தொழில் வளர்ச்சிக்கு ரூ.1,918 கோடி ஒதுக்கீடு. சென்னையை போல் கோவையிலும் ‘கே-ஒர்கிங் ஸ்பேஸ்’ அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட கோவை உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்கள் வரவேற்கத்தக்கது.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- கச்சத்தீவில் துவங்கிய திருவிழா: இந்திய, இலங்கை பக்தர்கள் பங்கேற்பு
- “தமிழக பட்ஜெட் அறிவிப்புகளில் போலித்தனமே அதிகம்!” - தவெக தலைவர் விஜய் விமர்சனம்
- தங்கக் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனு நிராகரிப்பு
- பழனிசாமிக்கு எதிராக தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை!