ARTICLE AD BOX
கூகிள் நிறுவனம் பெங்களூருவில் தனது புதிய அலுவலக வளாகத்தைத் திறந்துள்ளது. அனந்தா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வளாகம் அதிநவீன வசதிகளை உள்ளடக்கி இருக்கிறது. இது உலகளவில் கூகிளின் மிகப்பெரிய வளாகங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.
உலகளாவிய தொழில்நுட்ப முன்னேங்களில் முக்கியப் பங்கு வகிக்கும் கூகுள் நிறுவனம் 'அனந்தா' என்ற புதிய வளாகத்தை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் திறந்துள்ளது. "சபா" என்று அழைக்கப்படும் கூட்டங்களை நடத்துவதற்கான விசாலமான அரங்கம் உள்பட பல அம்சங்களுடன் பணிச்சூழலுக்கு இசைவான கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது.
அனந்தா வளாகம் கழிவுநீரை 100 சதவீதம் மறுசுழற்சி செய்தல், மழைநீர் சேகரிப்பு ஆகியவற்றிற்கான வசதிகளுடன் உருவாகியுள்ளது. பெரிய ஸ்மார்ட் கண்ணாடிகளும் இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
புதிய வளாகம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கூகிள் இந்தியாவின் துணைத் தலைவரும் மேலாளருமான பிரீத்தி லோபனா, "கூகிள் கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவின் தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சிகளை குடிமக்களுக்கு கொண்டு சேர்க்கும் லட்சிய பாதையில் பயணித்து வருகிறது" என்று கூறினார்.
பெங்களூருவில் உள்ள புதிய அனந்தா வளாகம் எங்கள் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருக்கும். இது AI தொழில்நுட்ப வளர்ச்சியின் முன்னுதாரணங்களைக் கொண்டதாக இருக்கிறது. உலகிற்கான தொழில்நுட்பப் படைப்புகளை இந்தியாவிலிருந்து கட்டியெழுப்பி வருகிறோம் என்று கூகுள் தனது பிளாக் பதிவில் கூறியுள்ளது.
அனந்தாவில் உள்ள ஒவ்வொரு தளமும் ஒரு நகரமைப்புக்கு நிகராக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு வசதியாக காற்றோட்டமான பாதைகள் உள்ளன. கட்டிடத்தின் மையத்தில் சபா எனப்படும் கூட்ட அரங்கம் உள்ளது.
இந்தியாவின் கார்டன் சிட்டி என்று அழைக்கப்படும் பெங்களூருவின் அடையாளத்தைத் தக்கவைக்கும் வகையில், அனந்தா வளாகத்தில் பசுமையான ஜாகிங் பாதைகள் உள்ளன. இவை வளாகத்திற்குள் சிறிய சந்திப்புகளுக்கு ஏற்ற சூழலை ஏற்படுத்திக் கொடுக்கின்றன.
கழிவுநீரை 100 சதவீதம் மறுசுழற்சி செய்யும் கட்டமைப்பும் உள்ளது. மேலும், அனந்தா வளாகத்திலேயே நூற்றுக்கணக்கான லிட்டர் மழைநீரை சேகரிக்கவும் வசதி உள்ளது. ஆற்றல் நுகர்வைக் குறைக்க இந்தியாவின் மிகப்பெரிய ஸ்மார்ட் கண்ணாடிகள் நிறுவப்பட்டுள்ளன.