பெங்களூரில் பிரபல தனியார் ஹோட்டல் மொட்டை மாடியில்.. இளம் பெண்ணிடம் அத்துமீறல்.. 3 பேர் கைது

3 days ago
ARTICLE AD BOX

பெங்களூரில் பிரபல தனியார் ஹோட்டல் மொட்டை மாடியில்.. இளம் பெண்ணிடம் அத்துமீறல்.. 3 பேர் கைது

Bangalore
oi-Velmurugan P
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் கோரமங்களா போலீசில் இளம் பெண் ஒருவர் அளித்த புகாரில், எனக்கு 33 வயது ஆகிறது. நான் கேட்டரிங் துறையில் பணியாற்றுகிறேன்.. பெங்களூரில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளில் உணவு பரிமாறும் வேலைகளை செய்து வருகிறேன். எனக்கு திருமணம் ஆகிவிட்டது. கடந்த வியாழன் அன்று பெங்களூரில் பிரபல தனியார் ஹோட்டல் மொட்டை மாடியில் நான்கு பேர் அத்துமீறினார்கள் என்று புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்

பெங்களூர் மாநகரத்தை பொறுத்தவரை இந்தியாவின் ஐடி தலைநகரம் என்று போற்றப்படுகிறது. இங்கு ஏராளமான ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ளன. இந்த ஐடி நிறுவனங்களில் ஏராளமான இளம் பெண்கள் பணிபுரிகிறார்கள். பெற்றோர்களை விட்டு விட்டு தனியாக பெங்களூர் வந்து அறை எடுத்து தங்கி ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டும். இவர்களுக்காக ஏராளமான விடுதிகளும் உள்ளன. இதேபோல் திருமணம் ஆகியும் சிலர் குடும்பத்தை பிரிந்து தனியாக பெங்களூரில் வசித்து ஐடி நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள். பெங்களூரில் பெண்களுக்கு எதிராக அவ்வப்போது சில கொடுமையான சம்பவங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில் 33 வயது பெண் மொட்டை மாடியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bangalore hotel

பெங்களூர் கோரமங்களா போலீசில் இளம் பெண் ஒருவர் அளித்த புகாரில், எனக்கு 33 வயது ஆகிறது. நான் கேட்டரிங் துறையில் பணியாற்றுகிறேன்.. பெங்களூரில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளில் உணவு பரிமாறும் வேலைகளை செய்து வருகிறேன். எனக்கு திருமணம் ஆகிவிட்டது. கடந்த வியாழன் அன்று இரவு ஜோதி நிவாஸ் கல்லூரி சந்திப்பில் காத்திருந்தேன். அப்போது 20 வயதுடைய நான்கு இளைஞர்கள் என்னுடைய பேசத்தொடங்கினார்கள். அவர்கள் நட்பாக பேசினார்கள்.பின்னர் ஒரு ஹோட்டலில் இரவு உணவிற்கு அழைத்து சென்றார்கள்.

இரவு உணவு சாப்பிட்ட பிறகு பிறகு, அவர்கள் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்கள். பின்னர் ஒரு தனியார் ஹோட்டலின் மொட்டை மாடியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து விட்டார்கள். இந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டிய அவர்கள், வெள்ளிக்கிழமை காலை 6 மணி அளவில் வெளியில் விட்டார்கள். நான் என் வீட்டிற்கு வந்த பின்னர், நடந்த சம்பவத்தை எனது கணவரிடம் கூறினேன்" என்று போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த தகவலை மூத்த காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே இளம் பெண் கூறிய அடையாளங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் குற்றவாளிகள் தேடிய போலீசார், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஹோட்டல்களில் வேலை செய்கிறார்கள் என்பது தெரியவந்தது.

"புகாரின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 70 (கும்பல் பாலியல் வன்கொடுமை) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து மூன்று குற்றவாளிகளைக் கைது செய்திருக்கிறோம். நான்காவது குற்றவாளியை அடையாளம் கண்டு விட்டோம்.. அவரைப் பிடிக்க தீவிர முயற்சிகள் செய்து வருகிறோம் என பெங்களூர் இணை ஆணையர் (கிழக்கு) ரமேஷ் பனோத் பிடிஐ செய்தியாளரிடம் தெரிவித்தார்.

More From
Prev
Next
English summary
What happened to a young woman on the terrace of a famous private hotel in Bangalore by 20-year-old youths?
Read Entire Article