பெங்களூரில் கால் பதித்த கூகுள்! நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட அனந்தா! சிறப்புகள் என்ன?

4 days ago
ARTICLE AD BOX

பெங்களூரில் கால் பதித்த கூகுள்! நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட அனந்தா! சிறப்புகள் என்ன?

Bangalore
oi-Vishnupriya R
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் கூகுள் நிறுவனம் மிகப் பெரிய அலுவலகத்தை திறந்துள்ளது. இதற்கு அனந்தா (ஆனந்தா) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் 5000 பேர் பணியாற்றும் அளவுக்கு இட வசதி உள்ளது.

இந்த புதிய வளாகத்தை பார்க்கும் போது கூகுளின் உலக அளவிலான செயல்பாடுகளில் வளர்ந்து வரும் இந்தியா பங்கை பிரதிபலிக்கிறது.

bangalore google

பெங்களூரில் மகாதேவாபுரம் எனும் இடத்தில்தான் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நீண்ட காலம் கால் ஊன்றுவதற்கான அனைத்து வசதிகளும் இந்த நிறுவனத்தில் உள்ளன.

பெங்களூர், குருகிராம், மும்பை, புனே உள்பட இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் கூகுளுக்கு 10 ஆயிரம் ஊழியர்கள் உள்ளார்கள். டிஜிட்டல் சேவைகளுக்கும் இணையதள பயன்பாட்டை விரிவுபடுத்தவும் கூகுள் நிறுவனம் அதிகபடியான முதலீட்டை செய்கிறது.

எனவே கூகுள் இந்தியாவின் முக்கியமான நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. மகாதேவபுரத்தில் 1.6 மில்லியன் சதுர அடியில் 5 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றும் வகையில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.

கூகுளின் பிற சேவைகளான ஆன்ட்ராய்டு, மேப்ஸ், டீப் மைன்ட், கிளௌட் உள்ளிட்டவையும் இந்த நிறுவனத்தில் பணியாற்றலாம். இந்த கட்டடத்திற்கு ஆனந்தா என பெயரிடப்பட்டுள்ளது. அப்படியென்றால் எல்லையற்ற என சமஸ்கிருதத்தில் பொருளாகும்.

நவீன கண்ணாடிகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும், ஜாக்கிங் செய்யவும் தனி பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. கண் பார்வையற்றவர்களும் எளிதாக நிறுவனத்தில் தனித்து சென்று வரும் வகையில் தரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு பெரிய மழை நீர் சேகரிப்பு தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது பயன்படுத்தப்பட்ட நீரை 100 சதவீதம் மறுசுழற்சி செய்யும் வசதியும் உள்ளது. சூரிய மின்னாற்றல் பயன்படுத்தப்படுகிறது.

More From
Prev
Next
English summary
Google opens a new office Ananta at Bangalore for its 5000 workers.
Read Entire Article