ARTICLE AD BOX
பூபதிநகர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி மேற்கு வங்கத்தின் மேதினிபூர் அடுத்த பூபதி நகரில் உள்ள ஒரு வீட்டில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன.
இதில் 3 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆம் ஆத்மி தொண்டர்களைத் தாக்கும் பாஜகவினர்: ஆணையத்துக்கு கேஜரிவால் கடிதம்!
இந்த நிலையில் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
புர்பா மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள பூபதி நகரில் வசிக்கும் பச்சனன் கோராய் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.