டிரம்ப் போட்ட அந்த "ஒரு" உத்தரவு.. பறக்க தொடங்கிய தங்கம் விலை.. இனி நிற்க வாய்ப்பே இல்லையாம்!

3 hours ago
ARTICLE AD BOX

டிரம்ப் போட்ட அந்த "ஒரு" உத்தரவு.. பறக்க தொடங்கிய தங்கம் விலை.. இனி நிற்க வாய்ப்பே இல்லையாம்!

Business
oi-Vigneshkumar
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதற்கிடையே அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுள்ள டிரம்ப் கனடா, மெக்சிகோ, சீனா பொருட்கள் மீது வரியை விதித்துள்ளார். இது சர்வதேச அளவில் ஒரு செயின் ரியாக்ஷனை உருவாக்கும் ஆபத்து இருக்கிறது. இதனால் சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி தங்கம் விலை உச்சம் தொடும் ஆபத்தும் உள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.

அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுள்ள டிரம்ப், தொடர்ச்சியாகப் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். இது அமெரிக்காவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

donald trump america gold

இந்த முறை அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கோஷத்தை அடிப்படையாகக் கொண்டே டிரம்ப் ஆட்சியைப் பிடித்திருந்தார். பிரச்சாரத்தின் போதும் கூட இது தொடர்பாகவே அவர் பல வாக்குறுதிகளை அளித்திருந்தார்.


டிரம்ப் தடாலடி:

அதேபோல அதிபராகப் பதவியேற்ற உடனேயே டிரம்ப் தொடர்ச்சியாகப் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். இது அமெரிக்கா மட்டுமின்றி, சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்துவதாக உள்ளது. அதன்படி தான் இப்போது அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இறக்குமதி வரியை விதிக்கப்போவதாக டிரம்ப் அறிவித்தார்.

 'வரி' போர் தொடங்குதா? கனடா, சீனாவுக்கு எதிராக அதிரடி காட்டிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்
'வரி' போர் தொடங்குதா? கனடா, சீனாவுக்கு எதிராக அதிரடி காட்டிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

அதன்படி கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரியும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% வரியும் விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்தார். பிரச்சாரத்தின் போதே இதுபோல இறக்குமதி வரியை விதிப்பேன் என்றே டிரம்ப் சொல்லி வந்தார். அதையே தான் அவர் இப்போது செய்துள்ளார். ஆனால், இது சர்வதேச அளவில் ஒரு வரி போரையே ஆரம்பித்து வைக்கும்.

வரி போர்:

டிரம்ப் இதற்கு முன்பு 2017-2021 வரை அதிபராக இருந்த போதும் இதுபோலத் தான் சீனாவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இறக்குமதி வரி விதித்தார். அதற்குப் பதிலடி தரும் விதமாகச் சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கு இறக்குமதி வரி விதித்தது. இதுபோல இரு நாடுகளும் மாறி மாறி வரி விதிக்கவே, அது தேவையில்லாத சர்வதேச பதற்றத்தை ஏற்படுத்தியது. இப்போதும் டிரம்ப் கிட்டதட்ட அதையே தான் செய்துள்ளார்.

மாறி மாறி வரி:

இந்த 3 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு டிரம்ப் வரி விதித்துள்ளார். அதற்குப் பதிலடியாகக் கனடாவும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப் போவதாக அறிவித்துள்ளது. வரும் நாட்களில் நிச்சயம் மற்ற நாடுகளும் வரி விதிக்கும். டிரம்ப் எந்தெந்த நாடுகள் மீது வரி விதிக்கிறாரோ.. அந்தந்த நாடுகளும் அமெரிக்கா மீது வரியை விதிக்கும். இது மீண்டும் ஒரு வரிப் போரை உருவாக்கும்.


தங்கம் விலை உயரும்:

இதனால் சர்வதேச நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் பாதிக்கப்படும். தேவையில்லாத பதற்றம் ஏற்படும். பொதுவாக இதுபோன்ற பதற்றம் ஏற்படும்போது முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகக் கருதி தங்கத்தில் முதலீடு செய்வார்கள். கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை மளமளவென உயர டிரம்ப்பும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. வரும் காலத்திலும் டிரம்ப் நிச்சயம் இதுபோன்ற தடாலடி உத்தரவுகளைப் பிறப்பிப்பார் என்றே எதிர்பார்க்கப்படும் சூழலில் தங்கம் விலை தொடர்ந்து உயரவே போகிறது என்கிறார்கள் வல்லுநர்கள்.

More From
Prev
Next
English summary
Discover how Trump's tariff orders are expected to drive gold prices to new heights (அமெரிக்க அதிபர் போட்ட உத்தரவால் அதிகரிக்கும் தங்கம் விலை): Learn about the impact of trade tensions on the gold market and what it means for investors.
Read Entire Article