ARTICLE AD BOX
புஷ்பான்னா Wildfire.., புஷ்பா 3 பார்க்க ரெடியா?? ரிலீஸ் தேதி இது தான்..,
கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்து இந்திய சினிமாவை புரட்டிப்போட்ட திரைப்படம் தான் புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான இப்படத்தின் இரண்டாவது பாகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஏன் சொல்ல போனால் அல்லு அர்ஜுன் கேரியரில் இப்படம் முக்கிய அங்கமாக மாறி இருக்கிறது.
இந்நிலையில் புஷ்பா 3ம் பாகம் குறித்து ஓர் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது ‘புஷ்பா 2’ திரைப்படம் வெற்றி அடைந்ததை அடுத்து, 3ம் பாகத்திற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக தயாரிப்பாளர் ரவி ஷங்கர் தெரிவித்துள்ளார். அல்லு அர்ஜுன் 2 படங்களில் நடித்து வருவதால், அதனை முடித்துவிட்டு இந்த படத்தில் நடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் 2028ம் ஆண்டு திரைக்கு வரும் எனவும் கூறியுள்ளார்.
The post புஷ்பான்னா Wildfire.., புஷ்பா 3 பார்க்க ரெடியா?? ரிலீஸ் தேதி இது தான்.., appeared first on EnewZ - Tamil.