புஷ்பா படத்தின் மூன்றாம் பாகம் வெளியாவது எப்போது?

13 hours ago
ARTICLE AD BOX
சுருக்கம் செய்ய
புஷ்பா படத்தின் மூன்றாம் பாகம் குறித்து தயாரிப்பாளர் தகவல்

புஷ்பா படத்தின் மூன்றாம் பாகம் வெளியாவது எப்போது? அதிகாரப்பூர்வமாக தயாரிப்பாளர் அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Mar 16, 2025
04:27 pm

செய்தி முன்னோட்டம்

புஷ்பா திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மூன்றாவது பாகத்தின் வெளியீடு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராபின்ஹுட் படத்தின் புரமோஷன் நிகழ்வின் போது தயாரிப்பாளர் ரவிசங்கர், புஷ்பா 3 படம் 2028 இல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தங்கல் மற்றும் பாகுபலி 2 படங்களுக்குப் பிறகு, உலகளவில் ₹1,650 கோடிக்கு மேல் வசூலித்த புஷ்பா 2: தி ரூல் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

படப்பிடிப்பு

புஷ்பா மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு

இயக்குனர் சுகுமார், ராம் சரணுடன் தனது தற்போதைய படத்தை முடித்த பிறகு புஷ்பா 3 படத்தின் பணிகளைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன், இயக்குனர்கள் அட்லீ மற்றும் திரிவிக்ரமுடன் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ள படங்களை முடித்துவிட்டு, இந்த படத்திற்கான பணிகளில் கவனம் செலுத்த உள்ளார்.

முன்னதாக, புஷ்பா 2 படத்தின் இறுதியில் மூன்றாவது பாகத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

பாக்ஸ் ஆபிஸ்

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை

புஷ்பா 2: தி ரூல் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. குறிப்பாக இந்தி சந்தைகளில், ₹1,000 கோடிக்கு மேல் வசூலித்தது.

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் மற்றும் ஜகபதி பாபு நடித்த இந்தப் படம், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்தார். புஷ்பா 3 இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படம் இந்திய சினிமாவில் முந்தைய வசூல் சாதனைகளை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இதற்கிடையே, மூன்றாம் பாகத்தின் கதைக்களம் மற்றும் தயாரிப்பு அட்டவணை பற்றிய கூடுதல் விவரங்களுக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Read Entire Article