ARTICLE AD BOX
எப்படியேனும் நம்மை பெற்றோர் பிரித்துவிடுவார்கள். நாம் உயிரை மாய்த்துவிடலாம் என காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவால் இருதரப்பு பெற்றோருடன் கண்ணீர் சோகத்திற்கு உள்ளாகினர்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கரீம்நகர் மாவட்டம், இலண்டகுண்டா மண்டலம், ராசப்பள்ளி பகுதியில் வசித்து வருபவர் மினுகு ராகுல் (வயது 18). அங்குள்ள நிர்மல் மாவட்டம், கனபூர் மண்டலம், எரிச்சிந்தல் கிராமத்தில் வசித்து வருபவர் கொலெட்டி சுவேதா (வயது 20).
இதையும் படிங்க: 15 மாதத்தில் 83 மர்ம மரணங்கள்.. அரசுப்பள்ளி விடுதியில் பழங்குடியின மாணவர்களுக்கு நடப்பது என்ன? அதிரவைக்கும் தகவல்.!
இவர்கள் இருவருக்கும் இடையே சமூக வலைத்தளம் வாயிலாக ஏற்பட்ட பழக்கம், பின்னாளில் காதலாக மாறி இருக்கிறது. இதனையடுத்து, காதல் ஜோடி அவ்வப்போது நேரில் சந்தித்தும், போனிலும் பேசி காதலை வளர்த்துள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
ஜோடியாக தற்கொலை
தங்களின் காதல் தொடர்பாக இருவரும் பெற்றோர் வீட்டில் தெரிவித்தபோது, அவர்கள் எதிர்ப்பு கூறியுள்ளனர். இதனால் நம்மை இவர்கள் சேரவிடமாட்டார்கள் என முடிவெடுத்த காதல் ஜோடி, வீட்டில் இருந்து வெளியேறி இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு காதல் வயப்பட்ட ஜோடி, பெற்றோரின் எதிர்ப்பால் புறப்பட்டது.
இருவரும் ஜம்மிகுண்டா பகுதியில் உள்ள பிஜிகிரிஷாரஃப் - பயப்பபள்ளி இரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள இரயில் தண்டவாளத்தில், இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டது. இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், இருவரின் உடலையும் மீது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: டிவி ரிமோட் சண்டையில் துயரம்; பெண் ஐடி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை.!