ARTICLE AD BOX
அல்லு அர்ஜுன்
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகி கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றியடைந்த திரைப்படம் புஷ்பா. இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து புஷ்பா இரண்டாம் பாகம் வெளிவந்தது.
அல்லு அர்ஜூனுடன் இணைந்து இப்படத்தில் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில் ஆகியோர் நடித்திருந்தனர். ரூ. 250 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் வசூலில் டபுள் மடங்கு லாபம் ஈட்டி சாதனை படைத்தது.
அல்லு அர்ஜுன் ஓபன்
இந்நிலையில், இப்படத்தில் ஒரு காட்சியில் நடிக்க பயந்ததாக அல்லு அர்ஜுன் கூறிய விஷயம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " புஷ்பா 2 படத்தில் இடம் பெற்ற ஜாதரா காட்சி குறித்து இயக்குநர் சுகுமார் கூறும்போது முதலில் நடிக்க பயந்தேன்.
ஏன்னென்றால் இயக்குநர் என்னிடம், ஒரு புடவை அணிய வேண்டும், ஒரு பெண்ணைப்போல உடை அணிய வேண்டும்' என்று கூறினார். பின் மனதில் தைரியத்தை வர வைத்து கொண்டு நடித்து விட்டேன்" என்று கூறியுள்ளார்.