புழல், சோழவரம் பகுதிகளில் திமுக சார்பில் கால்பந்து போட்டிகள்: எம்எல்ஏ பரிசு வழங்கினார்

14 hours ago
ARTICLE AD BOX

புழல்: சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு மாநில அளவிலான மாபெரும் 2 நாள் கைப்பந்து போட்டி செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் அங்காள பரமேஸ்வரி கோயில் விளையாட்டு திடலில் நடைபெற்றது. இதில் சென்னை, அரியலூர், தஞ்சாவூர், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கைப்பந்து விளையாட்டு வீரர்கள் விளையாடினார்கள்.

இதில் முதல் இடத்தை பிடித்த தஞ்சாவூர் அணிக்கு ரூ.50 ஆயிரம், 2வது இடத்தைப் பிடித்த செங்கல்பட்டு சோழிங்கநல்லூர் அணியினருக்கு ரூ.40 ஆயிரம், 3வது இடத்தைப் பிடித்த சென்னை அணிக்கு ரூ.30 ஆயிரம், 4வது இடத்தை பிடித்த சென்னை லயோலா கல்லூரி அணிக்கு ரூ.20 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் நினைவுப் பரிசு வழங்கும் விழா நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. விழாவுக்கு சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கருணாகரன் தலைமை தாங்கினார்.

சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ முதல் நான்கு இடம் பிடித்த அணியினருக்கு ரொக்க பரிசுகளையும், நினைவு பரிசையும் வழங்கினார். இதேபோல் புழல் ஒன்றிய திமுக சார்பில் செங்குன்றம் அடுத்த வடகரை அரசு ஆதிதிராவிட நலத்துறை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலில் ஒருநாள் எழுவர் கால் பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இதில் திருவொற்றியூர், மணலி, வடகரை, சீமவரம், மீஞ்சூர் பாடியநல்லூர், பம்மது குளம், வியாசர்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 16 அணிகள் கலந்து கொண்டன.

இறுதியில் பாடியநல்லூர் அணி முதலிடத்தையும், பம்மதுகுளம் அணி 2வது இடத்தையும் பிடித்தன. முதல் இடத்தைப் பிடித்தவர்களுக்கு ரூ.50,000, 2வது இடத்தைப் பிடித்தவர்களுக்கு ரூ.40 ஆயிரம் வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவுக்கு புழல் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் வடகரை அற்புதராஜ் தலைமை தாங்கினார். எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ பரிசுகளை வழங்கினார்.

The post புழல், சோழவரம் பகுதிகளில் திமுக சார்பில் கால்பந்து போட்டிகள்: எம்எல்ஏ பரிசு வழங்கினார் appeared first on Dinakaran.

Read Entire Article