புரதச்சத்தை அள்ளித்தரும் சிக்கன் பட்டாணி மசாலா! இப்படி செய்து பாருங்க

10 hours ago
ARTICLE AD BOX

சமைப்பது எல்லோருக்கும் பிடித்த ஒரு கலை. இதை வித விதமாக செய்து நமக்கு பிடித்தவர்களுக்கு கொடுக்க வேண்டும் என நினைப்பது வழக்கம். வீட்டில் வேலையில்லாமல் இருக்கும் நேரத்தில் ஒரு புதுவிதமான உணவை செய்து பார்ப்போம்.

அப்படி ஒரு வித்தியாசமான உணவு தான் சிக்கன் பட்டாணி மசாலாவாகும். இது ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதுடன் சமைப்பதற்கும் எளிதானது. சுவையும் மேன்மைமிக்கது. இந்த ரெசிபிக்கு பட்டாணி சிக்கன் தான் முக்கியமாக தேவை.

சப்பாத்தி, புரோட்டாவுக்கு வழக்கமான பட்டாணி மசாலா செய்வதற்குப் பதில் இப்படி சிக்கன் சேர்த்து சமைப்பது அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.எனவே இந்த பதிவில் சிக்கன் பட்டாணி மசாலா எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள்

  • சிக்கன் - அரை கிலோ
  • பச்சை பட்டாணி கால் கிலோ
  • நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
  • பச்சை மிளகாய் - 2
  • பட்டை - 2
  • கிராம்பு - 4
  • ஏலக்காய் - 2
  • மிளகு - ஒரு ஸ்பூன்
  • கொத்தமல்லி தூள் - 3 ஸ்பூன்
  • மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
  • கெட்டி தயிர் - 5 ஸ்பூன்
  • ஊறவைத்த முந்திரி - 10
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் - 4 ஸ்பூன்
  • தண்ணீர் தேவையான அளவு
  • கரம் மசாலா - 1 ஸ்பூன்
  • கஸ்தூரி மேத்தி - ஒரு ஸ்பூன்

செய்முறை

அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் சேர்த்த பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொள்ளவும் இஞ்சி பூண்டு வதங்கிய பின் சிக்கனுடன் கொத்தமல்லி தூள் மற்றும் மிளகாய்த் தூள் தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்

சிக்கன் ஐந்து நிமிடம் வதக்கிய பின் பச்சை பட்டாணி கெட்டியான தயிர் ஒன்றை கப் தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் வேக வைக்கவும் ஊற வைத்த முந்திரியை தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

சிக்கன் பட்டாணி வெந்தபின் அரைத்து வைத்திருந்த முந்திரி பேஸ்ட் கரம் மசாலா சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும் 5 நிமிடம் வெந்தபின் கடைசியில் கஸ்தூரி மேத்தி சேர்த்து இறக்கினால் சூப்பரான சிக்கன் பட்டாணி மசாலா ரெடி! இந்த சிக்கன் மசாலா சப்பாத்தி, புரோட்டா மற்றும் இடியாப்பம் போன்றவற்றுக்கு அருமையாக இருக்கும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


Read Entire Article