ARTICLE AD BOX

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கி வருபவர் ரோபோ சங்கர். இவரது மகள் இந்திரஜா ரோபோ சங்கர். இவர் தளபதி விஜய் உடன் இணைந்து பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

கடந்த வருடம் கார்த்திக் என்பவருடன் கோலாகாலமாக திருமணம் நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக பங்கேற்றனர்.
ஆனால் நிகழ்ச்சி ஆரம்பித்து சில வாரங்களிலேயே அவர்கள் நிகழ்ச்சியில் இருந்து விலகினர் காரணம் இந்திராஜா கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்தனர்.
சமீபத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும் குடும்பத்தினர் சந்தோஷமான பதிவை வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில் ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா சங்கர் நடித்துள்ள புதிய படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.
அதாவது எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் kooran என்ற படத்தில் நடித்துள்ளதாகவும் , இந்த திரைப்படம் பிப்ரவரி 28ஆம் தேதி வெளியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார் குறிப்பாக டாக் லவ்வர்ஸ்க்கு ஸ்பெஷல் திரைப்படம் என்று கூறியுள்ளார்.
இந்தத் தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
The post புதிய படத்தின் அப்டேட் கொடுத்த இந்திராஜா ரோபோ ஷங்கர்.. வைரலாகும் பதிவு..! appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.