புகழ்பெற்ற முன்னாள் டென்னிஸ் வீரர் 86 வயதில் காலமானார்!

5 hours ago
ARTICLE AD BOX

ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற முன்னாள் டென்னிஸ் வீரர் காலமானார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற முன்னாள் டென்னிஸ் வீரரும், விளையாட்டு வர்ணனையாளருமான ஃபிரெட் ஸ்டோல், 86 வயதில் இன்று (மார்ச் 6) மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் சிட்னி நகரத்தில் பிறந்து 1960களில் நட்சத்திர டென்னிஸ் வீரராக அறியப்பட்ட ஃபிரெட்டின் மரணத்திற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், அவரது மரணம் குறித்து டென்னிஸ் ஆஸ்திரேலியாவின் செயல் தலைவர் க்ராய்க் டில்லே கூறியதாவது, டென்னிஸ் விளையாட்டு வீரராகவும் வர்ணனையாளராகவும் ஃபிரெட் ஸ்டொல் ஓர் முக்கிய புள்ளியாக அறியப்படுவார் எனவும் அவரது சாதனைகளும், டென்னிஸ் விளையாட்டின் மீதான அவரது தாக்கமும் என்றென்றும் நிலைத்திருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை!

ஃபிரெட் ஸ்டோல் 86 வயதில் காலமானார்

மேலும், ஆஸ்திரேலியாவின் டேவிஸ் கோப்பை அணியின் நட்சத்திர விரரான ஃபிரெட், வீரராக ஓய்வு பெற்ற பின்னர், பயிற்சியாளராகவும், கூர்மையான வர்ணனையாளராகவும் டென்னிஸ் விளையாட்டுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார் என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

முன்னதாக, ஃபிரெட் 1962-69 வரையிலான கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் 10 முறை பட்டங்களை வென்றுள்ளார். மேலும், 7 முறை மிக்ஸ்ட் டபுல்ஸ் பட்டங்களையும் வென்றுள்ளார்.

ஃபிரெட் கடந்த 1965 பிரெஞ்சு ஓபன் போட்டியில் டோனி ரோச்சை வீழ்த்தி பட்டத்தை வென்றார். பின்னர், 1966 ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் ஜான் நியூகோம்பை வீழ்த்தி, நம்பர் 1 தரவரிசையில் இடம் பிடித்தார்.

இந்நிலையில், விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஆஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்காவிற்கு குடியேறிய ஃபிரெட் அவரது மனைவி, மகன் மற்றும் இரு மகள்களுடன் வாழ்ந்து வந்தார். மேலும், அவரது மகனான சாண்டன் என்பவரும் முன்னாள் டென்னிஸ் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article