ARTICLE AD BOX
பீகாரில் நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த்குமார் அரசியலுக்கு வரவேண்டுமென ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
பீகார் முதல்வராக இருக்கும் ஜக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் தற்போது 73 வயதை கடந்த நிலையில் அவரை தொடர்ந்து கட்சியை யார் வழிநடத்துவார் என கேள்வி எழுந்தது. நீண்ட நாட்களாகவே நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த்குமார் அரசியலுக்கு களமிறங்குவார் என கூறப்பட்டு வந்த நிலையில், இதனை அவர் முற்றிலும் மறுத்துள்ளார்.
எனினும் நிஷாந்த்குமாரிடம் ஐக்கிய ஜனதா கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் சூழலில், இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடுவார் எனக் கூறப்படுகிறது. வாரிசு அரசியலுக்கு நிதிஷ்குமார் எதிரானவர் என்றாலும், அவரது மகன் அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை என ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் கருத்து தெரிவிக்கின்றனர்.