பிளாஸ்டிக் குப்பைகளை கால்நடைகள் உட்கொள்வதால் உயிரிழக்கும் அபாயம்

3 days ago
ARTICLE AD BOX


ஊட்டி: ஊட்டியில் பல்வேறு பகுதிகளிலும் குப்பைகள் காணப்படுதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது மட்டுமின்றி அந்த பிளாஸ்டிக் குப்பைகளை கால்நடைகள் உட்கொள்வதால் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் நாள்தோறும் குப்பைகள் அகற்றப்பட்ட போதிலும், ஒரு சில இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவது மட்டுமின்றி, குப்பைகளில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை குதிரைகள், வளர்ப்பு எருமைகள், மாடுகள் போன்றவைகள் உட்கொள்வதால் அவைகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் வனங்களை ஒட்டிய பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுவதால் அவைகளை உட்கொள்ள வனவிலங்குகள் மக்கள் வாழும் பகுதிக்கு வரும் நிலையில் மனித விலங்கு மோதல் ஏற்படும் அபாயம் நீடிக்கிறது.

மேலும் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொள்வதால் வனவிலங்குகளும் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஊட்டி கிளன் ராக் பகுதியில் சாலையோரங்களில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் அகற்றப்படாமல் உள்ள நிலையில், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அதனை கால்நடைகள் மற்றும் வனவிலங்குகள் உட்கொள்வதால், உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே இதனை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post பிளாஸ்டிக் குப்பைகளை கால்நடைகள் உட்கொள்வதால் உயிரிழக்கும் அபாயம் appeared first on Dinakaran.

Read Entire Article