ஒசாமா பின் லேடனுக்காகவே வாதாடிய வக்கீல்.. "அந்த" ஒருவருக்கு வாதாட மறுத்து விலகல்.. யாருங்க அது?

2 hours ago
ARTICLE AD BOX

ஒசாமா பின் லேடனுக்காகவே வாதாடிய வக்கீல்.. "அந்த" ஒருவருக்கு வாதாட மறுத்து விலகல்.. யாருங்க அது?

New York
oi-Shyamsundar I
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க நீதிமன்றத்தில் ஒசாமா பின் லேடனுக்கு ஆதரவாகவே வாதாடிய பிரபல ஆண்டனி ரிக்கோ, அமெரிக்காவின் பிரபல பாடகர் ஷான் கம்ப்ஸ் வழக்கில் ஆஜராக மறுத்து வெளியேறி உள்ளார். லேடனுக்கு ஆதரவாக இருந்த வழக்கறிஞர் ஒருவர் சாதாரண பாடகர் ஒருவருக்கு ஆதரவாக ஆஜராக மறுத்தது ஏன்? பல மில்லியன் டாலர் கட்டணம் வழங்க தயாராக இருந்தும் கூட ஆஜராகி மறுத்தது ஏன்? அப்படி என்ன பயம்? அந்த வழக்கில் அப்படி என்னதான் நடந்தது?

2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், அமெரிக்க பாடகர் மற்றும் தயாரிப்பாளர் ஷான் கம்ப்ஸ் மீது அவரது முன்னாள் காதலி கேசி (கேசாண்ட்ரா வெண்டி) நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பஃப் டாடி, பி. டிட்டி, டிட்டி என்ற பெயர்களில் அழைக்கப்படும் ஷான் கம்ப்ஸ் அந்நாட்டின் பிரபல பாடகர்.

USA

2005 முதல் 2018 வரை நடந்ததாக கூறப்படும் பாலியல் பலாத்காரம், உடல் மற்றும் மன ரீதியிலான கொடுமைகள், போதை பொருள் பழக்கம் என்று பல புகார்களை சுட்டிக்காட்டி ஷான் கம்ப்ஸ் மீது முன்னாள் காதலி கேசி வழக்கு தொடுத்தார். சரி இதில் என்ன இருக்கிறது.. மற்ற கிரைம் வழக்குகள் போலத்தானே இந்த வழக்கும் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம்.

ஆனால் இதில் விஷயமே.. டிட்டி மீது உள்ள மற்ற புகார்கள்தான். 1991 முதல் 2023 வரை அவர் பல பெண்களை கொடுமைப்படுத்தியதாக, பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் உள்ளது. அதில் கவனிக்க வேண்டிய விஷயம் பல குழந்தைகளை, அண்டர் ஏஜ் சிறுவர், சிறுமிகளை பலாத்காரம் செய்ததாக புகார் உள்ளது.

அவருக்கு எதிராக 15க்கும் அதிகமான புகார்கள் வைக்கப்பட்டன. பல சிறுமிகளை பலாத்காரம் செய்தது, சிறுவர், சிறுமிகளை பிரபலங்களுக்கு "விற்பனை" செய்தது என்று பல புகார்கள் உள்ளன. இவர் அமெரிக்காவில் பல இடங்களில் பெரிய மாளிகைகளை கட்டி.. அதில் பல பெண்கள் மற்றும் குழந்தைகளை பலாத்காரம் செய்துள்ளார். அதேபோல் பல பிரபலங்கள், நடிகர்கள், அரசியல் தலைவர்களை இங்கே அழைத்து வந்து அவர்களுக்கு "சேவைகளை" வழங்கி உள்ளார். முக்கியமாக சிறுமிகளை சப்ளை செய்துள்ளார்.

வழக்கறிஞர் விலகல்

இந்த நிலையில்தான் பிரபல ஆண்டனி ரிக்கோ, பாடகர் ஷான் கம்ப்ஸ் வழக்கில் ஆஜராக மறுத்து வெளியேறி உள்ளார். அமெரிக்க நீதிமன்றத்தில் ஒசாமா பின் லேடனுக்கு ஆதரவாகவே வாதாடியவர் இவர். அமெரிக்கவின் பிரபல வழக்கறிஞர்களில் ஒருவர் இவர். இவருக்கு பல மில்லியன் டாலர் கட்டணம் கொடுத்து பணிக்கு எடுத்துள்ளார் ஷான் கம்ப்ஸ். ஆனால் நியூயார்க் கோர்ட்டில் வழக்கு நடக்கும் சில வாரங்களுக்கு முன் வழக்கில் இருந்து வெளியேறி உள்ளார் ஆண்டனி ரிக்கோ.

ஒசாமா பின்லேடன் தொடர்பான உலக வர்த்தக மைய குண்டுவெடிப்பு வழக்குகளில் அவருக்கு ஆலோசகராக ஆண்டனி ரிக்கோ பணியாற்றினார். 2001 ஆம் ஆண்டில், அவர் பின்லேடனை ஆதரித்து நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜானார். இதனால் அமெரிக்க சட்ட துறையில் ஆண்டனி ரிக்கோ மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டார். அப்படி ஒசாமா பின் லேடனுக்காகவே ஆஜரான ஆண்டனி ரிக்கோ பாடகர் ஷான் கம்ப்ஸ் வழக்கில் ஆஜராக மறுத்து வெளியேறி உள்ளார்

அப்படி மோசமான நபரா பாடகர் ஷான் கம்ப்ஸ்.. அவருக்கு எதிராக அந்த அளவிற்கு மோசமான ஆதாரங்கள் இருக்கிறதா? நான் இந்த வழக்கில் இனியும் தொடர முடியாது.. மோசமான சூழல் உள்ளது என்று வழக்கறிஞர் ஆண்டனி ரிக்கோ சொல்லும் அளவிற்கு அவர் என்ன ஆதாரங்களை பார்த்தார்.. பல மில்லியன் டாலர் தந்தும் கூட வழக்கில் ஆஜராக மறுத்தது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

More From
Prev
Next
English summary
Why did Diddy Sean Combs's lawyer quit his case? What is the real reason?
Read Entire Article