பிரபல நடிகர் படத்தின் பாடலுக்கு டான்ஸ் ஆடும் நயன் குழந்தைகள்.. வைரல் வீடியோ..!

3 days ago
ARTICLE AD BOX

பிரபல நடிகர் நடித்த படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு நயன்தாராவின் இரட்டை குழந்தைகள் டான்ஸ் ஆடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரை உலகின் நட்சத்திர தம்பதிகளில் ஒன்றான விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர். உயிர், உலகம் என்று பெயரிடப்பட்ட அந்த குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோவில், அவரது மடியில் இரட்டை குழந்தைகள் உட்கார்ந்திருக்க, ஜூனியர் என்டிஆர் நடித்த ’தேவாரா’ என்ற படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு டான்ஸ் ஆடுகின்றனர்.

இந்த வீடியோவை விக்னேஷ் சிவன் பகிர்ந்த நிலையில், ஏராளமான லைக்குகள் குவிந்து வருகின்றன. இதன் கேப்ஷனாக, "ரிதம், டைமிங், மியூசிக் தானே நமக்கு உயிர் உலகம் வாழ்க்கை எல்லாமே!" என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவுக்கு இரண்டு லட்சத்துக்கும் அதிகமான லைக்குகள் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

Read Entire Article