பிரபல கபாலி பட தயாரிப்பாளர் கே.பி. சவுத்ரி தற்கொலை… அதிர்ச்சியில் திரையுலகினர்..!!

2 hours ago
ARTICLE AD BOX

தெலுங்கு சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளர் ஆக இருப்பவர் சங்கர கிருஷ்ண பிரசாத் சவுத்ரி. இவரை கே.பி சவுத்ரி என்று அழைக்கும் நிலையில் 44 வயது ஆகிறது. இவர் தமிழ் சினிமாவில் வெளியான கபாலி திரைப்படத்தை தெலுங்கு சினிமாவில் தயாரித்தவர். இவர் கோவா மாநிலத்தின் வடபகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்த நிலையில் அவருடைய அறை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்துள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்து அங்கிருந்தவர்கள் உடனடியாக உள்ளே சென்று பார்த்த போது அவர் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Read Entire Article