ARTICLE AD BOX
பலூன் அக்கா தெரியுமா.. கீர்த்தி சுரேஷ் அக்கா தெரியுமா? டிரெண்டாகும் "அக்கா டீஸர்"
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் நெட்பிலிக்ஸ் தளத்திற்காக எடுக்கப்பட்ட வெப் தொடரில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார். கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே நடித்துள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த தொடருக்கு அக்கா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இத்தொடரின் டீசர் சற்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. Netflix தளத்தில் வெளியான இந்த அக்கா டீசரில் கீர்த்தி சுரேஷ் வித்தியாசமான கெட்டப்பில் மாஸாக இருக்கிறார்.
1980கால கட்டத்தில், தென்னிந்தியாவின் பெர்னூரு என்ற நகரத்தில் கேங்க்ஸ்டர் ராணிகளைச் சுற்றி கதை நகர்கிறது. இதில், கீர்த்தி சுரேஷ், பெண்களை வைத்து ஆட்சி நடத்தி வருகிறார். அக்காவின் ஆட்சியை வீழ்த்துவதற்கான உத்திகளுடன் ராதிகா ஆப்தே பலவிதமான சதிகளை செய்கிறார். ஆனால், அக்காவின் படையினர் பாரம்பரிய உடைகளை அணிந்து, ஆயுதம் ஏந்தி, தங்கள் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள போடுகின்றனர். அக்கா வெப் தொடரை, தர்மராஜ் ஷெட்டி எழுதி இயக்கியுள்ளார், மேலும் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸின் ஆதித்யா சோப்ரா, யோகேந்திர மோக்ரே மற்றும் அக்ஷயே விதானி, தன்வி ஆஸ்மியும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். YRF என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இத்தொடரை தயாரித்துள்ளது.
நடிகை கீர்த்தி சுரேஷ்: தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வெற்றிப்படத்தை கொடுத்து வந்த நடிகை கீர்த்தி சுரேஷ், பாலிவுட் பேபி ஜான் மூலம் இந்தி சினிமாவில் தடம் பதித்தார். தெறி திரைப்படத்தின் இந்தி ரீமேக்கான இப்படத்தில், வருண் தவானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கடந்த டிசம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், கலவையான விமர்சனங்களைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாக்ஸ் ஆஃபீஸில் வரவேற்பைப் பெறவில்லை.
காதல் திருமணம்: நடிகை கீர்த்தி சுரேஷ், நாக் அஷ்வின் இயக்கத்தில் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 'நடிகையர் திலகம்' படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாக நடித்து பாராட்டை பெற்றார். மேலும் அந்த படத்திற்கு தேசிய விருது வென்றார். தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். கடந்த டிசம்பர் 12ந் தேதி கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட கால நண்பரான ஆண்டனி தட்டிலை திருமணம் செய்து கொண்டார்