பிரதமர் மோடியுடன் தொழிலதிபர் பில் கேட்ஸ் சந்திப்பு.. இருவரும் என்ன பேசினார்களாம்?

9 hours ago
ARTICLE AD BOX

பிரதமர் மோடியுடன் தொழிலதிபர் பில் கேட்ஸ் சந்திப்பு.. இருவரும் என்ன பேசினார்களாம்?

Delhi
oi-Vignesh Selvaraj
Subscribe to Oneindia Tamil

டெல்லி: மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும், பிரபல தொழிலதிபருமான பில் கேட்ஸ் இந்தியா வந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது, தொழில்நுட்பம், சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

ரைசினா மாநாடு ஆண்டுதோறும் டெல்லியில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாநாட்டில் உலகளாவிய அரசியல் - பொருளாதாரம் குறித்து விவாதித்து, சர்வதேச அளவில் நிலவும் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படும். இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசு பிரதிநிதிகள் மட்டுமல்லாது, தொழில் அதிபர்கள், அறிவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்கின்றனர்.

Narendra Modi Bill gates Delhi

அந்த வகையில், இந்த ஆண்டு ரைசினா மாநாடு தற்போது டெல்லியில் நடந்து வருகிறது. இதில், பங்கேற்பதற்காக, மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும், பிரபல தொழிலதிபருமான பில் கேட்ஸ் இந்தியா வந்துள்ளார். இந்த வருகையின் போது மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ஜே.பி.நட்டா, சிவராஜ் சிங் சவுகான், அஷ்வினி வைஷ்ணவ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரை அவர் சந்தித்து பேசினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் நாடாளுமன்ற அலுவல்களையும் பில் கேட்ஸ் பாா்வையிட்டாா். தொடர்ந்து, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை பில் கேட்ஸ் நேற்று சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எப்போதுமே பில்கேட்ஸை சந்தித்து பேசுவது சிறப்பானதாக இருக்கும். இன்றைய சந்திப்பின் போது, எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் விதமாக, தொழில்நுட்பம், சுகாதாரம், விவசாயம், புதுமை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது" எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல, மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் வளர்ச்சி குறித்து சிறப்பான விவாதம் நடத்தப்பட்டது. இந்தியாவின் வளர்ச்சியில் சுகாதாரம், விவசாயம், செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற துறைகளில் ஏற்பட்டுள்ள சிறப்பான முன்னேற்றங்களால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. புதுமையினால் இந்தியாவில் மட்டுமல்லாது, உலகளவில் வளர்ச்சியை ஏற்படுத்துகிறது என்பதை பார்க்க சுவாரஸ்யமாக உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
English summary
Microsoft co-founder Bill Gates met Prime Minister Narendra Modi and discussed a host of subjects including technology, innovation and sustainability.
Read Entire Article