ARTICLE AD BOX
Top 7 Unlucky Zodiac Signs in February 2025 : பிப்ரவரி மாதம் பிறந்துவிட்ட நிலையில் இந்த மாதம் அதிக பிரச்சனைகளை சந்திக்க கூடிய டாப் ராசியினர் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
Top 7 Unlucky Zodiac Signs in February 2025 : 2025 ஆம் ஆண்டு வெற்றிகரமான பிறந்து ஜனவரி மாதம் முடிந்து இப்போது பிப்ரவரி பிறந்துவிட்டது. கடந்த மாதம் எதிர்பார்த்த பலனை பெறாத ராசியினர், இந்த மாதம் எப்படியிருக்கும் என்று நினைப்பது உண்டு. அவர்களில் இந்த மாதம் அதிர்ஷ்டத்தை பெறக் கூடிய ராசியினர் பற்றி ஏற்கனவே பார்த்தோம். இப்போது, பிப்ரவரியில் அதிக பிரச்சனைகளை சந்திக்க கூடிய ராசியினர் பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்வோம்.
கும்ப ராசிக்கான பிப்ரவரி 2025 மாத ராசி பலன்:
கும்ப ராசியைப் பொறுத்த வரையில் இந்த மாதம் காயம் ஏற்படும் அபாயம் உள்ளது. குடும்பத்தில் வயதானவர்களின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படலம். செலவுகள் அதிகரிக்கும். கையிருப்பு குறையும். வேலை செய்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி வரும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. நீண்ட தூர பயணத்தை தவிர்ப்பது நல்லது. உடல்நலனில் அதிக அக்கறை காட்டுவது நல்லது.
மகரம் ராசிக்கான பிப்ரவரி மாதம் எப்படி?
அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். கடன் மேல் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். சுப நிகழ்ச்சிகளாலும் கடன் வரலாம். வெளியூர், வெளிநாடு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதனால், மகிழ்ச்சியானாலும் கையிருப்பு கரைந்து கஷ்டம் ஏற்படும். இந்த மாதம் முழுமையான பலன் கிடைக்காது. வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
தனுசு ராசிக்கான பிப்ரவரி மாதம் எப்படி இருக்கும்?
இந்த மாதம் நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் காசு, பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உங்களுக்கான பணம் வேறொருவருக்கு செல்லும். வங்கி லோன் கடைசி தருணத்தில் கை நழுவி போகும். தொழில், வியாபாரத்தில் கஷ்டம் வரும். பயணங்களால் செலவுகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். வீண் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். வேலையில் கவனமாக இருக்க வேண்டும். வண்டி, வாகங்களில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். நீண்ட தூர பயணத்தை தவிர்ப்பது நல்லது.
விருச்சிக ராசிக்கான பிப்ரவரி மாத ராசி பலன்:
உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். பழைய நோய்களால் உடல்நலனில் கவனம் செலுத்துவது நல்லது. மூல நோய் அல்லது வேறு ஏதேனும் கடுமையான நோய் ஏற்படலாம். புதிய நபரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் திடீர் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் கவனமாக பேச வேண்டும். குடும்பத்தில் சண்டை சச்சரவு ஏற்படலாம்.
துலாம் ராசிக்கான பிப்ரவரி 2025 மாத ராசி பலன்:
அதிக செலவுகளால் மன அழுத்தம் ஏற்படலாம். மாணவர்களுக்கு வெற்றி கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். காதலிப்பவர்கள் காதலியிடம் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையில் பிரச்சனைகள் வரலாம். உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும். பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தம் நிலவும். வாடிக்கையாளர்களின் வருகை குறையும். திருமணம் தள்ளிப் போகலாம்.
ரிஷப ராசி பலன் பிப்ரவரி 2025:
இந்த மாதம் பல பயணங்களுக்கான வாய்ப்புகள் உள்ளன. மிகவும் கடினமாக உழைத்தாலும், விரும்பிய பலன் கிடைக்காது. வேலை நிலைமை முன்பை விட சற்று சிறப்பாக இருக்கலாம். சில விஷயங்களில் உங்கள் துணையின் பேச்சைக் கேட்க வேண்டும், இல்லையெனில் சர்ச்சை ஏற்படலாம். நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
மேஷ ராசி பலன் பிப்ரவரி 2025:
பிப்ரவரியைப் பொறுத்த வரையில் மேஷ ராசிக்கு செலவுகள் அதிகரிக்கும். நேரம், காலம் வீணடிக்கப்படும். எதற்கெடுத்தாலும் பெற்றோரின் உதவியை நாட வேண்டும். வேலையில் பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும். இல்லையென்றால் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். பழைய நோய் மீண்டும் தலைதூக்கும். கீல்வாதம் மற்றும் செரிமான பிரச்சனை வரலாம்.