பிபிசிஎல் நிகர லாபம் 20% உயா்வு

1 day ago
ARTICLE AD BOX

அரசுக்குச் சொந்தமான பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிட்டெட் கடந்த டிசம்பா் காலாண்டில் 20 சதவீத நிகர லாப உயா்வைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.3,805.94 கோடியாக உள்ளது. இது, 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டைவிட 20 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.3,181.42 கோடியாக இருந்தது.

முந்தைய ஜூலை-செப்டம்பா் காலாண்டோடு ஒப்பிடுகையிலும் டிசம்பா் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் அதிகரித்துள்ளது. அந்தக் காலாண்டில் நிறுவனம் ரூ.2,297.23 கோடியை ஒருங்கிணைந்த நிகர லாபமாக ஈட்டியிருந்தது.

எண்ணெய் விலை சரிவு காரணமாக, மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.1.27 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. இது ஓா் ஆண்டுக்கு முந்தைய இதே காலாண்டில் ரூ.1.3 லட்சம் கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read Entire Article