ARTICLE AD BOX
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமை, விசேட குணங்கள் ஆகியவற்றுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் இயல்பாகவே அதிக பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் நினைத்த காரியத்தை அடையும் வரையில் ஓயவே மாட்டார்கள்.
அப்படி அதிக பிடிவாத குணத்தால் நினைத்ததை சாதிக்கும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர் என்பதால் இயல்பாகவே அதிக கோபம் மற்றும் பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் கோபம் கொள்ளும் போது மிகவும் கொடூரமாக நடந்து கொள்வார்கள். ஆனால் இவர்களின் கோபம் மற்றும் பிடிவாதம் சரியான விடயத்துக்காக மட்டுமே இருக்கும்.
இவர்கள் தங்களின் பிடிவாத குணத்தால் எதையும் சாதிக்கும் ஆற்றலை நிச்சயம் கொண்டிருப்பார்கள். இவர்களின் பிடிவாத குணமே இவர்கள் வாழ்க்ககையில் முன்னேற்றம் அடைவதற்கு காரணமாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் பிறந்த பெண்கள் சூரியனின் ஆகித்தில் இருப்பதால், இவர்களிடம் எல்லை மீறிய பிடிவாத குணமும் கோபமும் நிச்சயம் இருக்கும்.
இவர்கள் சிறந்த தலைமைத்துவ குணம் கொண்டவர்களாகவும், கடின உழைப்பாளிகளாகவும் இருப்பார்கள்.
இவர்கள் வாழ்வில் எப்போதும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் மிகவும் உறுதியானவர்களாகவும் பிடிவாதமாகவும் இருப்பார்கள்.
இவர்கள் மற்றவர்களின் பொய்களையும் துரோகங்களையும் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். எதையும் முகத்துக்கு நேராக பேசும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி பெண்களும் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், சின்ன சின்ன விடயங்களுக்கும் அதிகம் கோபம் கொள்ளும் குணம் கொண்டவர்களாகவும், பிடிவாதம் பிடிப்பதில் வல்லர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் கோபம் தான் இவர்களின் மிகப்பெரும் எதிரியாக இருக்கும். ஆனால் தங்களின் பிடிவாத குணதத்தால் வாழ்வில் வெற்றிகளை குவிப்பார்கள்.
கோபத்தால் சில உறவுகளை இவர்கள் இழக்க நேரிடும். இவர்கள் நினைத்த காரியத்தை சாதிக்கும் வரையில் ஓயவே மாட்டார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |