ARTICLE AD BOX

பேட்டி ஒன்றில் நடிகை சோனா பிச்சை எடுத்தாலும் எடுப்பேன் ஆனால் வடிவேல் உடன் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
கடந்த 2001 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி பின்னர் தெலுங்கு ,மலையாளம் என பல்வேறு மொழிகளில் பல படங்களில் நடிகை சோனா நடித்துள்ளார். அதில் பெரும்பாலும் கிளாமர் கேரக்டர்களாகவே அமைந்துள்ளது. 2008 ஆம் ஆண்டு கதாநாயகியாக பத்து பத்து என்ற படத்தில் நடித்தார். சில படங்களில் வில்லி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். 2010 ஆம் ஆண்டு நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான கனிமொழி என்ற படத்தின் மூலமாக தயாரிப்பாளராகவும் ஆகினார். ஒரு சில தமிழ் சீரியல்களிலும் நடித்துள்ளார். கடைசியாக பூமர் அங்கிள் என்ற படத்தில் நடித்தார்.
சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், வடிவேலு பற்றி அவர்களுடன் நடித்தவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் மீது சொல்கின்றனர். அதையே நானும் செய்ய விரும்பவில்லை. குசேலன் படத்திற்கு பிறகு பல படங்களில் அவருடன் இணைந்து நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் மறுத்து விட்டேன். கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிகர் வடிவேலுவுடன் நடிக்க மாட்டேன் என்றும் பிச்சை எடுத்து சாப்பிட்டாலும் சாப்பிடுவேனே தவிர அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்றும் உறுதியாக நடிகை சோனா தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் ஏன் நடிகை சோனா இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறித்து கேள்விகள் சமூக ஊடகங்களில் எழுந்து வருகிறது.