ARTICLE AD BOX
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி சமீபத்தில் விஜய் டிவியில் முடிவடைந்த கையேடு... கலர்ஸ் தொலைக்காட்சியில் மறு ஒளிபரப்பு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதை சேனல் தரப்பு தற்போது நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

விஜய் டிவியில், கடந்த 2017-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனை உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். ஆரம்பத்தில் சில சர்ச்சைகளுக்கு வழிவகுத்த இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி பெற காரணமாக அமைத்தது கமல் ஹாசன் அந்த நிகழ்ச்சியை நேர்த்தியாக தொகுத்து வழங்கியது தான். பின்னர் அடுத்தடுத்து சுமார் 7 சீசன்களை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார்.

இடையில் கமல்ஹாசன் தன்னுடைய அரசியல் கட்சியை துவங்கியதால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிக அரசியல் நெடி வீச துவங்கி விட்டதாக விமர்சனங்களும் எழுந்தது. ஆனால் அதை பற்றி எல்லாம் கொஞ்சம் கூட அலட்டி கொள்ளாத கமல்ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 சீசன் வரை தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த ஆண்டு நிறைவடைந்த பிக்பாஸ் 8-ஆவது சீசன், துவங்குவதற்கு 1 மாதத்திற்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
Samyuktha: கணவரை விவாகரத்து செய்த பிக்பாஸ் தமிழ் பிரபலம்!

கமல் இந்த முடிவை எடுக்க காரணம், அமெரிக்கா சென்று AI தொழில்நுட்பம் குறித்து படிப்பதற்காக என கூறப்பட்டது. கமல்ஹாசன் விலகியதால், பிக்பாஸ் சீசன் 8, நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. பல பிரபலங்கள் பெயர் பிக்பாஸ் சீசன் 8 தொகுப்பாளர் லிஸ்டில் அடிபட்ட நிலையில், ஒருவழியாக பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது உறுதியானது.

அதன் படி அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி துவங்கப்பட்ட நிலையில், விஜய் சேதுபதி தனக்கே உரிய பாணியில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். குறிப்பாக கமல்ஹாசனின் சாயல் இல்லாமல், அவரை போல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டும் என நினைக்காம், இவர் தொகுத்து வழங்கியது மிகப்பெரிய பிளஸ்சாக பார்க்க பட்டது. இந்த நிலையில், விஜய் சேதுபதி... தொகுத்து வழங்கிய 8-ஆவது சீசன் இந்த ஆண்டு ஜனவரி மாதம் நிறைவடைந்த நிலையில், இதில் முத்து குமரன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விஜய் டிவியில் நிறைவடைந்த கையோடு, அதை மறு ஒளிபரப்பு செய்யும் உரிமையை கலர்ஸ் தொலைக்காட்சி கை பற்றியது. அதன்படி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை ஒளிபரப்பாகி வந்த நிலையில், திடீர் என நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. TRP -யில் மோசமான சரிவை கண்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.