ARTICLE AD BOX
புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்தினால்தான் தமிழகத்திற்கான நிதியை ஒதுக்கமுடியும் என்று மறைமுகமாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.
அதில், “ அரசியல் காரணங்களுக்காக மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்காதீர்கள். தேசிய கல்விக்கொள்கையை குறுகிய கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம். புதிய கல்விக்கொள்கை மொழி சுதந்திரத்தன்மை கொண்டது. எந்தமொழியையும் திணிக்கும் பேச்சுக்கு இடமில்லை. பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களுக்கு தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளன.
அரசியல் கருத்து வேறுபாடுகளை தாண்டி மாணவர்களின் நலன் கருதி முடிவு எடுக்க வேண்டும். தாய்மொழியில் தரமான கல்வி பெறுவதை தேசிய கல்விக்கொள்கை உறுதி செய்கிறது.
கல்வியில் அரசியலை புகுத்தாதீர். மாநில கல்வி சூழலுக்கு ஏற்ப மாற்றங்களை செய்யும் வகையில் தேசிய கல்விக்கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களும் தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளன. தேசிய கல்விக்கொள்கையை குறுகிய கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம். சமூக மற்றும் கல்வி மேம்பாட்டில் தமிழ்நாடு முன்னோடு மாநிலமாக உள்ளது. ” என்பது போன்ற கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக தர்மேந்திர பிரதான் வீடியோ ஒன்றினையும் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “அரசியல் கருத்து வேறுபாடுகளை தாண்டி மாணவர்களின் நலன் கருதி முடிவு எடுக்க வேண்டும். தாய்மொழியில் கல்வி பெறுவதை தேசிய கல்விக்கொள்கை உறுதி செய்கிறது. பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்காததால் தமிழ்நாடு அரசு ரூ. 5000 கோடியை இழக்கிறது.
மாணவர் நலனுக்காக கொள்கையை தமிழ்நாடு அரசு நிராகரிப்பது பிற்போக்குத்தனமானது. தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படுவதாக பொறுப்புள்ள பதவியில் இருப்போர் பரப்பக்கூடாது. தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொண்ட மாநிலங்கள் மத்திய அரசின் நிதியை முழுமையாக பெறுகின்றன. மாநில கல்வி சூழலுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யும் வகையில் தேசிய கல்விக்கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம் கூட்டாச்சி தத்துவத்தின் அம்சங்களுக்கு எதிரானது. விளிம்பு நிலை மக்களையும் உள்ளடக்கிய கற்றல் சூழலை ஏற்படுத்தியுள்ளது. புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். “ என்று பேசியுள்ளார்.