ARTICLE AD BOX
தேனி மாவட்டத்தில் மார்ச் 1, 2025 அன்று 10,000 வேலைவாய்ப்புகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 120க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன; 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு ஆண்டும் பள்ளி, கல்லூரி, தொழிற்கல்வி முடித்து லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை தேடி வருகிறார்கள். அவர்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மத்திய மற்றும் மாநில அரசு பணிகளில் இணைய விரும்பும் இளைஞர்களுக்காக சிறப்பு பயிற்சி வழங்கி தேர்வுக்கு தயார் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக வழங்கப்பட்டுள்ளது. இதன் படி அரசு பணியில் காலியாக உள்ள இடங்களில் 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தனியார் துறையில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி வரும் வகையில், மாவட்டம் தோறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தேனி மாவட்டத்தில் 10ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கிடும் வகையில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
அந்த வகையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து தேனி மாவட்டத்தில் 01.03.2025 சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மேரி மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நல்லகருப்பன்பட்டி, பெரியகுளம் கிழக்கு வளாகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்
* 120 க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள்.
* 10000 க்கும் மேற்பட்ட காலியிடங்கள்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பம் மற்றும் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சிவகுப்பில் சேருவதற்கான விண்ணப்பம் வழங்குதல்,
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு பதிவு வழிகாட்டுதல்கள்.

கல்வித்தகுதிகள்
* 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை /ஐ.டி.ஐ./டிப்ளமோ / நர்சிங் பார்மஸி/பொறியியல் பட்டப் படிப்பு
மேலும் விவரங்களுக்கு
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தேனி.
97153 26379
வயது வரம்பு
18 வயது முதல் 40 வயது வரை
* தனியார் வேலைவாய்ப்பு குறித்து அறிந்து @ www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்