பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்து முதல் முறையாக மனம் திறந்த விராட் கோலி

10 hours ago
ARTICLE AD BOX

பெங்களூரு,

அண்மையில் முடிவடைந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் தோல்வியை தழுவியதால் பெரும் விமர்சனங்களை சந்தித்த இந்திய அணியின் வீரர்களுக்கு பி.சி.சி.ஐ. சில கட்டுப்பாடுகளை விதித்தது.

அதில் முக்கிய ஒன்றாக, வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின்போது வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் குறிப்பிட்ட நாட்கள் மட்டும் தங்கியிருக்க முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதாவது வெளிநாட்டில் 45 நாட்களுக்கு மேலான தொடரில் விளையாடினால் 14 நாட்களும், அதற்கு குறைவானது என்றால் ஒரு வாரமும் வீரர்களுடன் குடும்ப உறுப்பினர்கள் தங்கியிருக்கலாம் என்ற விதிமுறை பல முன்னணி வீரர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த விதிமுறை குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ள விராட் கோலி, "வெளிநாட்டு பயணங்களின்போது ஏற்படும் மன அழுத்தம் போன்ற சூழ்நிலைகளில் இருந்து மீள குடும்பத்தினரின் ஆதரவு மிகவும் அவசியமானது என்பதை பலரும் உணரவில்லை. இதுபோன்ற விதிமுறைகள் உருவாக்கப்படுவது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. களத்தில் சிறப்பாக ஆடாத சமயத்தில் போட்டி முடிந்த பிறகு எனது அறைக்கு சென்று தனியாக சோகத்தோடு உட்கார்ந்து இருக்க விரும்பவில்லை. இயல்பாக இருக்க வேண்டி உள்ளது.

வீரர்கள் நல்ல மனநிலையில் இருப்பது அவசியம். அப்படி இருந்தால்தான் சிறப்பாக செயல்பட முடியும். நான் நன்றாக இருந்தால்தான் கடமையை முடித்துவிட்டு மீண்டும் வாழ்க்கையை பார்க்க முடியும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியை தருகிறது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதை தவற விடுவதில்லை" என்று கூறினார்.


Read Entire Article