ARTICLE AD BOX
சருமம் தொடர்பான பிரச்சனைகளுக்கு பல நூறு ஆண்டுகளாக சித்த மருத்துவத்தில் பறங்கிப்பட்டை மூலிகை பயன்படுத்தப்பட்டு வருவதாக மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இது சூரணம், பொடி, கசாயம் மற்றும் பதங்கம் என பல்வேறு மருந்து வடிவங்களில் கொடுக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சருமத்தில் உருவாகும் தேமல், வறட்சித் தன்மை போன்றவற்றுக்கு இது நல்ல மருந்தாக செயல்படுகிறது. அந்த வகையில் இந்த பறங்கிப்பட்டை பொடியை கடைகளில் இருந்து வாங்கிக் கொள்ளலாம்.
இதனை நம் முகத்திற்கு தேவையான அளவிற்கு எடுத்து அத்துடன் சிறிதளவு பால் மற்றும் ரோஸ் வாட்டார் ஆகியவை சேர்த்து பசை பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். இப்படி செய்தால் சிம்பிளான மூலிகை ஹோம்மேட் ஃபேஸ்பேக் தயாராகி விடும்.
இதனை முகத்தில் தடவி விட்டு சுமார் 30 நிமிடங்களுக்கு பின்னர் கழுவி விடலாம். இப்படி செய்யும் போது முகம் பொலிவாக மாறும் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். சிலருக்கு புருவத்தில் இருக்கும் முடிகள் கூட உதிர்ந்து போகும். அந்தப் பிரச்சனையையும் இது தீர்க்கும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
எனவே, இந்த பொடியை தினமும் பயன்படுத்தலாம். இதனால் முகத்தில் இருக்கும் தேமல், கருவளையம் போன்றவை நீங்கும். சிலருக்கு வைட்டமின் குறைபாடு காரணமாக உடலில் சில பகுதிகள் வெள்ளை நிறமாக இருக்கும். அதற்கு இந்தப் பொடியை பயன்படுத்தலாம்.
இரசாயனங்கள் சேர்க்கப்பட்ட பல்வேறு பொருட்கள் பயன்படுத்தும் போது ஏற்படக் கூடிய ஒவ்வாமை மற்றும் பக்க விளைவுகளை, இது போன்ற இயற்கையான மூலிகைகள் பயன்படுத்தும் போது தடுக்க முடியும்.
நன்றி - Mr Ladies Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.