பாலைவனமும் கடலும் சந்திக்கும் பூமியின் 5 விசித்திரமான இடங்கள்!

3 hours ago
ARTICLE AD BOX

பூமி பல்வேறுபட்ட விசித்திரமான இயற்கை அழகை உள்ளடக்கியது. தண்ணீர் இல்லாத பாலைவனங்கள் கடல் நீரை சந்திக்கும் இடத்தை நினைத்துப் பார்த்தாலே மகிழ்ச்சி பொங்கும். அத்தகைய விசித்திரமான, ஒரு பக்கம் பாலைவனம், ஒரு பக்கம் கடல் என்றிருக்கும் 5 இயற்கை அதிசயங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

1.ஆப்பிரிக்கா

அட்லாண்டிக் பெருங்கடலை சஹாரா பாலைவனம் மேற்கிலும் , செங்கடலை கிழக்கிலும் சந்திக்கிறது. இந்த இடத்தில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்திலான அழகிய சிறிய வீடுகளால் ஆன நகரங்கள் இந்த இடத்திற்கு அழகு சேர்க்கின்றன. அட்லாண்டிக் பெருங்கடலுக்கும் அட்லஸ் மலைகளுக்கும் இடையில் நூற்றுக்கணக்கான பழங்கால கல் நினைவு சின்னங்கள் உள்ளதால் இந்த இடம் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக உள்ளது.

2.சிலி

வடக்கு சிலியில் அன்டோ ஃபாகஸ்டா பகுதியை உள்ளடக்கிய அட்டகாமா பாலைவனம் பசிபிக் பெருங்கடலை சந்திக்கிறது. பல நைட்ரேட் சுரங்க நகரங்களால் சூழப்பட்ட இங்கு, நீண்ட கடற்கரைகள் மற்றும் அலைகளால் சூழப்பட்ட மலைகளையும் காணலாம். இங்கு இரவுகள் மாயாஜாலமானவையாக இருப்பதோடு லாஸ் ஃபிளமென்கோஸ் நேஷனல் ரிசர்வ் பகுதியில் உள்ள நிலவின் பள்ளத்தாக்கு இப்பகுதியில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களில் ஒன்றாகும்.

இதையும் படியுங்கள்:
ஜோடியாகச் செல்ல தென்னிந்தியாவின் 10 இடங்கள்!

5 Strange Places on Earth Where Desert and Sea Meet!

3.ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய பாலைவனம் இந்தியப் பெருங்கடலை சந்திக்கும் இந்த இடம் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். எனெனில் இந்து மகா சமுத்திரத்தின் நீல நிற நீருக்கு அருகில் நெருப்பு நிழல் பாறைகள் இருப்பதைக்காண அதாவது கடல் மற்றும் பாலை வனத்தில் இணைப்புக்காட்சிகளை காண மக்கள் இங்கு வரிசை கட்டி நிற்கிறார்கள். ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரம் அழகிய கடற்கரைகளுக்குப் பெயர் பெற்றது.

4.அண்டார்டிகா

சூடான மணல், பிரகாசமான சூரிய ஒளி, பறக்கும் தூசி இவையெல்லாம் இல்லாத துருவப் பாலைவனம் கடலைச் சந்திக்கும் இடம் வித்தியாசமானது . இது மிகவும் குளிராகவும், பனிப்பொழிவாகவும் இருப்பதோடு , இங்கு McMurdo Dry எனப்படும் பள்ளத்தாக்குகளில், பாலைவனத்தின் பனி உருகி, அண்டார்டிகாவின் கடற்கரையின் நீலநிற நீரில் கலக்கிறது. அந்த இடத்தை காணும்போது திரும்பி போக மனமே வராது .

5.ஆப்பிரிக்கா (நமீப் பாலைவனம்)

ஆப்பிரிக்காவில் உள்ள யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான நமீப் பாலைவனம் அட்லாண்டிக் பெருங்கடலை சந்திக்கிறது. இங்கு மக்கள் தொகை அதிகம் இல்லை என்றாலும் நமீப் பாலைவனம் அட்லாண்டிக் பெருங்கடலைச் சந்திப்பது இந்த இடத்திற்கு அழகு சேர்க்கிறது. ஒரு சில குடியிருப்புகள் மட்டுமே உள்ள இங்கு, டோரோப் தேசிய பூங்கா மற்றும் நமீப்-நாக்லஃப்ட் தேசிய பூங்கா ஆகியவை முக்கிய இடங்களாக உள்ளன.

மேற்கூறிய ஐந்து இடங்களும் உலகின் அதிசயமான இடங்களாக இயற்கை அழகில் முன்னணியில் உள்ளன.

Read Entire Article