ARTICLE AD BOX
/indian-express-tamil/media/media_files/ZjrGE53FkFczSeKQrnbI.jpg)
ஆரஞ்சில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. 100 கிராம் ஆரஞ்சில் 43 மில்லி கிராம் கால்சியச் சத்துக்கள் உள்ளது என்று அமெரிக்க வேளாண் துறை ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்துகின்றன. எனவே ஆரஞ்சுகளை சாப்பிடுவது உங்களின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது. தசைகளின் இயக்கத்துக்கு உதவுகிறது என்று அன்சுல் சிங் கூறுகிறார்.
/indian-express-tamil/media/media_files/2024/12/09/wyCzSEH6jObuhaAW0PWT.jpg)
அத்திப்பழங்களில் கால்சியச் சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் பொட்டாசியச் சத்துக்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. அரை கப் அத்திப்பழத்தில் 180 மில்லி கிராம் கால்சியச் சத்துக்கள் உள்ளது. இதில் நார்ச்சத்துக்கள் அதிகம், இவை செரிமானத்துக்கு உதவுகிறது. இதில் அதிகம் உள்ள பொட்டாசியச் சத்துக்கள் இதயத்துக்கு நல்லது.
/indian-express-tamil/media/media_files/2025/02/12/CpVjmzp3m1YcXxIJFWL1.jpg)
கிவியில் அதிகளவில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இதில் கால்சியச் சத்துக்களும் உள்ளது. இதில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள், சரும ஆரோக்கியம் மற்றும் கொலாஜென் உற்பத்தியையும் அதிகரிக்கிறது. இதில் 60 கிராம் கால்சியச் சத்துக்கள் இருப்பதாகவும், அது எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுவதாகவும் நிபுணர் கூறுகிறார்.
/indian-express-tamil/media/media_files/fc2CXx4ApatgxeQNCwUR.jpg)
100 கிராம் பப்பாளியில் 30 கிராம் கால்சியச் சத்துக்கள் உள்ளது. இதில் வைட்டமின் சி மற்றும் ஏ சத்துக்களும் உள்ளது. இது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது. கண் ஆரோக்கியத்துக்கும் நல்லது. பப்பாளியை நீங்கள் சாப்பிடும்போது அது உங்களை தொற்றுக்களில் இருந்து காக்கிறது. இது உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/04/ie-blackberries.jpg)
ப்ளாக்பெரிகளில் கால்சியச் சத்துக்கள் அதிகம் உள்ளது. அரை கப் ப்ளாக் பெரியில் 42 மில்லிகிராம் கால்சியச் சத்துக்கள் உள்ளது. அது தவிர வைட்டமின் சி, நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு மண்டலத்தின் இயக்கத்துக்கு உதவுகிறது.
/indian-express-tamil/media/media_files/4va3vBjrC6kTCgGWfwA2.jpg)
ராஷ் பெரிகளிலும் கால்சியச் சத்துக்கள் உள்ளது. அரை கப் ராஷ் பெரியில் 32 மில்லி கிராம் கால்சியச் சத்துக்கள் உள்ளது. இதில் நார்ச்சத்துக்களும், வைட்டமின் சி சத்துக்களும் உள்ளது. இந்த பழம் செரிமான ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு ஆகியவற்றை அதிகரிக்கிறது. இது எலும்பு மற்றும் பற்களை வலுவாக்குகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/08/apricot12.jpg)
இதில் வைட்டமின் ஏ சத்துக்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் பொட்டாசியச் சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் கால்சியச் சத்துக்களும் அதிகம் உள்ளது. ஒரு ஆப்ரிகாட்டில் 14 மில்லி கிராம் கால்சியச் சத்துக்கள் உள்ளது. இந்த பழம் கண்களுக்கு நல்லது. மேலும் மலச்சிக்கலைத் தடுக்கிறது. இதை நீங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, அது உங்களின் எலும்பை வலுவாக்குகிறது.
/indian-express-tamil/media/media_files/KRHW5F8sNu4ilVzrlhVQ.jpg)
எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. மஞ்சள் நிறத்தில் உள்ள இந்தப் பழத்தில் கால்சியச் சத்துக்களும் உள்ளது. 100 கிராம் எலுமிச்சையில் 26 மில்லி கிராம் கால்சியச் சத்துக்கள் உள்ளது. இதில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளதால், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. கால்சியச் சத்துக்களை உறிஞ்சும் திறனை மேம்படுத்துகிறது. இது எலும்பு ஆரோக்கியத்துக்கு நல்லது.