பாலிவுட் பிரபலங்களுக்கு கொலை மிரட்டல்…. பாகிஸ்தானில் இருந்து வந்து ஈமெயில்…. பரபரப்பு….!!!

3 hours ago
ARTICLE AD BOX

பாலிவுட் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நகைச்சுவை நடிகர் கபில் சர்மா, நடிகர் ராஜ்பால் யாதவ், நடன இயக்குனர் ரெமோ டிசோசா மற்றும் நடிகையும் பாடகியுமான சுகந்தா மிஸ்ரா ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது. அந்த மின்னஞ்சலில் உங்கள் சமீபத்தியல் செயல்பாடுகளை நாங்கள் கண்காணித்து வருகிறோம், மேலும் ஒரு முக்கியமான விஷயத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவது அவசியம் என்று நம்புகிறேன். இது ஒரு விளம்பர ஸ்டன்டோ அல்லது உங்களை துன்புறுத்தும் முயற்சியோ இல்லை, இந்த செய்தியை மிகுந்த தீவிரத்துடனும், ரகசியத்துடனும் நடத்துமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மின்னஞ்சல் பிஷ்ணு என்ற பெயரில் வந்துள்ளது. இது பாலிவுட் சினிமா பிரபலங்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மும்பையில் உள்ள காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இந்த மின்னஞ்சல் பாகிஸ்தானில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மிரட்டல் வந்த பாலிவுட் பிரபலங்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Read Entire Article