ARTICLE AD BOX
பாலிவுட் நடிகரான சல்மான்கானுக்கு சில தினங்களுக்கு முன்பு லாரன்ஸ் கும்பல் கொலை மிரட்டல் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது திரை உலகை அதிர்ச்சியடை செய்தது. இதனால் மற்ற பிரபலங்களும் பீதிக்கு உள்ளாகினர்.
இந்நிலையில் பாலிவுட் பிரபலங்கள் நடிகர் ராஜ் பால் யாதவ், நகைச்சுவை நடிகர் கபில் ஷர்மா, பாடகர் சுகந்தா மிஸ்ரா, நடன இயக்குனர் ரெமோ டிசோசா ஆகியோருக்கும் கொலை மிரட்டல் வந்துள்ளது.
மின்னஞ்சல் மூலமாக வந்த இந்த மிரட்டலுக்கு பதிலளிக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்று அவர்கள் மிரட்டி உள்ளனர். இது குறித்து மும்பை காவல் நிலையத்தில் நகைச்சுவை நடிகர் ராஜ் பால் யாதவ் புகார் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து பிரபலங்கள் தங்களுக்கு வந்த மிரட்டல் குறித்து புகார் அளிக்க காவல்துறையினர் ஐ பி இணையதள முகவரியை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.