ARTICLE AD BOX
Published : 25 Jan 2025 12:02 AM
Last Updated : 25 Jan 2025 12:02 AM
பிரபல துணை நடிகர் ஜெயசீலன் காலமானார்
<?php // } ?>பல்வேறு படங்கள் மூலம் அறியப்பட்ட துணை நடிகர் ஜெயசீலன் காலமானார். அவருக்கு வயது 40.
’தெறி’ படத்தில் விஜய்யுடன் குழந்தைகள் ரைம்ஸ் பாடச் சொல்லும் காட்சியில் தவறாக பாடி அடி வாங்கும் காட்சியில் நடித்தவர் ஜெயசீலன். அப்படத்தின் மூலம் அனைவராலும அறியப்பட்டவர். சில தினங்களாகவே மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். மஞ்சள் காமாலை தீவிரமானதால் படுத்த படுக்கையாகவும் இருந்துள்ளார்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 40. ஜெயசீலனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவருடைய இறுதிச் சடங்கும் நாளை காலை புது வண்ணாரப்பேட்டையில் நடைபெறுகிறது. இவர் மறைவுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
‘தெறி’ படம் மட்டுமன்றி ‘புதுப்பேட்டை’, ‘விக்ரம் வேதா’, ‘பிகில்’ படத்திலும் அனைவரும் அறியப்படும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- ‘மதகஜராஜா’ வெற்றி எதிரொலி: மீண்டும் இணைகிறது விஷால் - சுந்தர்.சி கூட்டணி!
- காரைக்குடியில் காங்கிரஸ் பிரமுகர் வெட்டிக் கொலை
- “திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் யாரும் அரசியல் செய்யக் கூடாது” - நயினார் நாகேந்திரன்
- கும்பமேளாவில் முழு துறவறத்துக்கு மாறிய நடிகை மம்தா குல்கர்னி: விரைவில் மகா மண்டலேஷ்வர் பதவி