ARTICLE AD BOX
நடிகர் பாசில் ஜோசஃப் நடித்த பொன்மான் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
இயக்குநர் ஜோதீஸ் ஷங்கர் இயக்கத்தில் நடிகர்கள் பாசில் ஜோசஃப், லிஜோமோல், சஜின் கோபு உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியான படம் பொன்மான்.
தங்கத்தை மையமாக வைத்து உருவான இப்படத்தில் பொன் எந்த அளவிற்கு மனிதர்களின் மோசமான குணங்களை வெளியே கொண்டு வருகிறது என்பதை சிறப்பாக எழுதியிருந்தனர்.
இதையும் படிக்க: கூலி ஓடிடி தொகை இவ்வளவா?
இப்படம், மார்ச் 14 அன்று ஹாட்ஸ்டார் ஓடிடியில் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது.
#PonMan
இதுவரைக்கும் நான் பாத்த basiloda படங்களிலே இதான் best மிரட்டி விட்டான். வாய்ப்பு கிடைச்சா எல்லாரும் இந்த படத்தை பாருங்க
pic.twitter.com/g4fzjXnJ1Y
இந்த நிலையில், இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும் படத்தைக் கொண்டாடி வருவதுடன் பாசில் ஜோசஃப்பின் நடிப்பையும் பாராட்டி வருகின்றனர்.
ரூ. 3 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ. 10 கோடி வரை வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.