பாம்பன் மீனவா்கள் 11 போ் கைது

10 hours ago
ARTICLE AD BOX

கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே புதன்கிழமை இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் மீனவா்கள் 11 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். 2 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மீனவா்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

இவா்கள் புதன்கிழமை இரவு கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் 2 விசைப் படகுகளைப் பறிமுதல் செய்தனா். மேலும், படகுகளில் இருந்த பாம்பன் மீனவா்கள் 11 பேரைக் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட 11 மீனவா்களையும், பறிமுதல் செய்யப்பட்ட 2 விசைப் படகுகளையும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்ல உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Read Entire Article